.

Pages

Saturday, September 6, 2014

பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் உலக கல்வி அறிவு நாள் பேரணி !

பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் பேராவூரணியில் மாபெரும் உலக கல்வி அறிவு நாள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
         
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி எழுத்தறிவு, கல்வி அறிவு பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கும் பொருட்டு யுனெஸ்கோ நிறுவனம் சார்பில் உலக கல்வி அறிவு நாளாக அறிவிக்கப்பட்டு உலகம் முழுவதிலும் கொண்டாடப்படுகிறது.

பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் எஸ்.டி.எஸ். செல்வம் தலைமை வகித்தார். பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் வி.மனோகரன் பேரணியை துவக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் வீ.முத்துவேலு முன்னிலை வகித்தார். முதுகலை பட்டதாரி ஆசிரியர் எம்.கணேசன் வாழ்த்தினார். பேரணி பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது. மேற்பனைக்காடு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் அறிவழகன் நிறைவுரையாற்றினார்.

பேரணியில் கல்லூரி இயக்குநர்கள், ஆசிரியர்கள், என்.சி.சி, ரோட்ராக்ட், நாட்டுநலப்பணி திட்ட மாணவர்கள், கல்லூரி முதலாமாண்டு மாணவர்கள் உள்பட நானூறு பேர் கலந்து கொண்டனர். மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர். கல்வி விழிப்புணர்வு துண்டறிக்கைகளையும் விநியோகித்தனர்.
               
கணினி துறை பேராசிரியர் முத்துசாமி, ஆங்கிலத்துறை பேராசிரியர் சந்திரசேகரன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

செய்தி: எஸ்.ஜகுபர் அலி,
பேராவூரணி.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.