.

Pages

Saturday, September 6, 2014

சாய்ந்து விழுந்த நடுத்தெரு மின்கம்பம் இணைப்பு தாரர்களுக்கு தற்காலிக மின் இணைப்பு !

கடந்த 04 செப்டம்பர் 2014 வியாழக்கிழமை அன்று “நடுத்தெருவில் மின் கம்பம் முறிந்து கீழே சாய்ந்தது! பெரும் விபத்து தவிர்ப்பு!” என்ற தலைப்பில் புகைப்படத்தோடு நிகழ்வை நமது தளத்தில் பதிந்து இருந்தோம்.

இதனை தொடர்ந்து அப்பகுதில் உள்ள சில வீடுகளுக்கும், அருகில் இருக்கும் ரேஷன் கடைக்கும் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு இருந்தது. இதனால் அப்பகுதியில் கடும் இருட்டு நிலவியதோடு மட்டுமல்லாமல் வீடுகளுக்கும் மின் இணைப்பு இல்லாமல் பொதுமக்கள் மிகவும் அவதியுற்றனர். மின் இணைப்பு துண்டிப்பால் அருகில் உள்ள ரேசன் கடையும் இயங்காமல் இருந்து வந்தது.

இதைதொடர்ந்து அப்பகுதியில் குடியிருக்கும் சிலர் மின்சார வாரியத்தோடு நல்லுறவை கொண்டுள்ள K.M.A. ஜமால் முஹம்மது அவர்களிடம் தொடர்பு கொண்டு கூறியிருக்கிறார்கள். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு அப்பகுதியில் குடியிருப்போரிடம் விசாரித்துள்ளார். உடனே பணியில் இருக்கும் மின்வாரிய ஊழியர்களான திரு. கோபால் மற்றும் அவருடைய உதவியாளர்களையும் அவசரமாக அழைத்து தற்காலிக மின் இணைப்பு வழங்கவும், புதிய மின்கம்பம் உடனே நிறுவவும் அவர்களிடம் கேட்டுகொண்டார்.

தற்போது அப்பகுதிக்கு தற்காலிகமாக மின் இணைப்பு வழங்கபட்டுள்ளது. மேலும் மின்வாரியத்தால் புதிய மின்கம்பம் நடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. துரித நடவடிக்கை மேற்கொண்ட K.M.A. ஜமால் முஹம்மது அவர்களுக்கும், மின் வாரிய ஊழியர்களுக்கும் அப்பகுதி மக்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.




1 comment:

  1. பெரும் விபத்து தவிர்க்கப் பட்டுள்ளதும், தக்க நேரத்தில் களத்தில் இரங்கி பணியாற்றிய சமூக சேகவர் K.M.A. ஜமால் முஹம்மது அவர்களுக்கு மில்லியன் நன்றி!!

    கௌன்சிலர் எங்கே! குப்பை எப்போ அள்ளுவீங்க!!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.