இதனை தொடர்ந்து அப்பகுதில் உள்ள சில வீடுகளுக்கும், அருகில் இருக்கும் ரேஷன் கடைக்கும் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு இருந்தது. இதனால் அப்பகுதியில் கடும் இருட்டு நிலவியதோடு மட்டுமல்லாமல் வீடுகளுக்கும் மின் இணைப்பு இல்லாமல் பொதுமக்கள் மிகவும் அவதியுற்றனர். மின் இணைப்பு துண்டிப்பால் அருகில் உள்ள ரேசன் கடையும் இயங்காமல் இருந்து வந்தது.
இதைதொடர்ந்து அப்பகுதியில் குடியிருக்கும் சிலர் மின்சார வாரியத்தோடு நல்லுறவை கொண்டுள்ள K.M.A. ஜமால் முஹம்மது அவர்களிடம் தொடர்பு கொண்டு கூறியிருக்கிறார்கள். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு அப்பகுதியில் குடியிருப்போரிடம் விசாரித்துள்ளார். உடனே பணியில் இருக்கும் மின்வாரிய ஊழியர்களான திரு. கோபால் மற்றும் அவருடைய உதவியாளர்களையும் அவசரமாக அழைத்து தற்காலிக மின் இணைப்பு வழங்கவும், புதிய மின்கம்பம் உடனே நிறுவவும் அவர்களிடம் கேட்டுகொண்டார்.
தற்போது அப்பகுதிக்கு தற்காலிகமாக மின் இணைப்பு வழங்கபட்டுள்ளது. மேலும் மின்வாரியத்தால் புதிய மின்கம்பம் நடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. துரித நடவடிக்கை மேற்கொண்ட K.M.A. ஜமால் முஹம்மது அவர்களுக்கும், மின் வாரிய ஊழியர்களுக்கும் அப்பகுதி மக்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.





பெரும் விபத்து தவிர்க்கப் பட்டுள்ளதும், தக்க நேரத்தில் களத்தில் இரங்கி பணியாற்றிய சமூக சேகவர் K.M.A. ஜமால் முஹம்மது அவர்களுக்கு மில்லியன் நன்றி!!
ReplyDeleteகௌன்சிலர் எங்கே! குப்பை எப்போ அள்ளுவீங்க!!