.

Pages

Wednesday, September 3, 2014

சேனா மூனா இன்று வேட்பு மனு தாக்கல் ! [ படங்கள் இணைப்பு ]

அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 8 வது வார்டு பகுதியில் நடைபெற இருக்க்கும் இடைதேர்தலில் அதிமுக கட்சியின் சார்பில் கடற்கரை தெருவை சேர்ந்த சேனா மூனா என்கிற ஹாஜா முகைதீன் போட்டியிடுவதாக அறிவிப்பு செய்யப்பட்டது.

இந்நிலையில் அதிமுக கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை தேர்தல் அதிகாரிகளிடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என்ற அறிவிப்பை அடுத்து இன்று காலை 11.15 மணியளவில் பேரூராட்சி அலுவலகத்திற்கு கட்சியினர் சென்று உதவி தேர்தல் அதிகாரி ச. பாலு அவர்களிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இவருக்கு மாற்று வேட்பாளராக கடற்கரை தெருவை சேர்ந்த முஹம்மது இக்பால் வேட்பு மனுவை அளித்தார்.

இதில் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சரோஜா மலை அய்யன், எம்ஜிஆர் மன்ற மாவட்ட இளைஞர் அணி செயலளர் ஜெய பிரகாஷ் நாராயணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் P.N. ராமசந்திரன், அதிமுக சிறுபான்மை நல பிரிவு மாவட்ட செயலாளர் அதிரை அஜீஸ், நகர அதிமுக செயலாளர் பிச்சை, துணை செயலாளர் முஹம்மது தமீம், வார்டு கவுன்சிலர்கள் அப்துல் லத்திப், சிவக்குமார், உதயகுமார், அபூ தாஹிர், அதிமுக நகர சிறுபான்மை நலப்பிரிவின் தலைவர் அ.மு. அப்துல் ஜப்பார், ஏனைய அதிமுக பொறுப்பாளர்கள், உள்ளிட்ட அப்பகுதி பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.




7 comments:

  1. Anaithu katchiyum ivarukku vondruthaan... podhuvaha seyal padum manithar enbadhal avarukkaha Dmk, Admk, kamminust, mattum pala podhunala vaathihal Aadharavu iruppadhai kaanalam.....
    Ur Beach mohideen B.sc cs

    ReplyDelete
  2. Anaithu katchiyum ivarukku vondruthaan... podhuvaha seyal padum manithar enbadhal avarukkaha Dmk, Admk, kamminust, mattum pala podhunala vaathihal Aadharavu iruppadhai kaanalam.....
    Ur Beach mohideen B.sc cs

    ReplyDelete
  3. My best wishes Haja Mohideen. 👍

    ReplyDelete
  4. உலகிலும் சமூகத்திலும் எத்துணையோ நிகழ்வுகள் தொலை நோக்கு பார்வை செய்திகள் அதிகம் உள்ளன.
    இதற்கிடையில் நமதூரின் Just ஒரு வார்டு கவுன்சியல்ர் தேர்தல் இது ஒரு சப்பை மேட்டர் தயவுசெய்து அதிரை வலைதளங்கள் இதற்கு முக்கியத்துவம் தரவேண்டாம் ........வெளிநாடுவாழ் அதிரையர்கள் இதைவிட மற்றவற்றை உங்களிடம் அதிகம் எதிர்பார்கின்றோம் .

    ReplyDelete
  5. இடை தேர்தலில் எதிரிகள் இல்லாமல் ஆளும் கட்சி ஜெய்க்கும் ஆனால் வரும் செப்டம்பர் 20 ம் தேதி பெங்களூர் தீர்ப்பு தலைமைக்கு ஆப்பு இருக்கு, அந்த இடத்துக்கு யாராவது போட்டி இடுங்க.

    புழல் சிறைக்கு செல்வாரா இல்லையான்னு அவனவன் பந்தயம் வைத்து சூதாட்டம் பண்ணுறான்!!! சூப்பர் கேம்.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. வரும் செப்டம்பர் 20 ம் தேதி பெங்களூர் தீர்ப்பு தலைமைக்கு ஆப்பு இருக்கு, அந்த இடத்துக்கு யாராவது போட்டி இடுங்க. அது சரி லதிப் எந்த வார்டு உறுப்பினர் அந்த வார்டுக்குள் அவர் போக முடியுமா இதன் நகல் தலைமுக்கு அனுப்ப படும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.