இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் பிரதமரின் மக்கள் நிதி திட்டத்தின் மூலம் குடும்பத்தினர் வங்கிக் கணக்குத் தொடங்கி வருகின்றனர். மாவட்டத்தில் இன்னும் வங்கிக் கணக்குத் தொடங்கப்படாமல் உள்ள குடும்பத்தினர் அருகிலுள்ள வங்கிக் கிளையை அல்லது வங்கிச் சேவகரை டிச. 18-ம் தேதிக்குள் அணுகி வங்கிக் கணக்குத் தொடங்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
இந்தக் கணக்குத் தொடங்குபவர்களுக்கு ரூ. 30,000-க்கு காப்பீடு செய்யப்படும். மத்திய அரசின் மானிய உதவிகள், நிதியுதவிகள் அந்தந்த வங்கிக் கணக்கின் மூலமாக நேரடியாக வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களும் வங்கிக் கணக்குத் தொடங்க வேண்டும் என்பதால், அவர்கள் பணம் செலுத்தாமலே கணக்குத் தொடங்கலாம். கணக்குத் தொடங்குவது குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் முன்னோடி வங்கியின் தொலைபேசி எண் 04362 - 238798 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

நல்ல திட்டம் தான் இதனை பயன்படுத்திக் கொள்வதோடு மற்றவார்களுக்கும் தெரியப் படுத்துவதும் நல்லது. இல்லையென்றால் இதனை (பேங்க் அக்கௌன்ட் ) பெற்று தர எஜன்ட் பணத்தை கரந்திடுவான், பிறகு மோசடி சம்பவம் நடக்கும்.
ReplyDeleteபொது மக்களே உஷார்! உஷார்!!