.

Pages

Thursday, July 13, 2017

காதிர் முகைதீன் கல்லூரியில் பாரதிதாசன் பல்கலைக்கழக விளையாட்டுக்குழு பொதுக்குழுக் கூட்டம்!

அதிராம்பட்டினம், ஜூலை 13
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக விளையாட்டுக்குழு 2017-2018 ஆம் கல்வி ஆண்டின் பொதுக்குழுக்கூட்டம் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தை காதிர் முகைதீன் கல்லூரி செயலர் எஸ்.ஜே அபுல் ஹசன் தொடக்க உரை நிகழ்த்தினார். கல்லூரி முதல்வர் ஏ. முகம்மது முகைதீன் தலைமை வகித்தார்.

இக்கூட்டத்தில், நடப்பு ஆண்டிற்கான பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகள் நடைபெறும் இடம் மற்றும் தேதிகள் முடிவு செய்யப்பட்டன. மேலும் பல்கலைக்கழக அணியினை தேர்வு செய்வதற்காக தேர்வுக்குழு உறுப்பினர்கள், அணி மேலாளர்கள் மற்றும் பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ஒன்பது மாவட்டங்களை உள்ளடக்கிய கல்லூரிகளிலிருந்து சுமார் 100 க்கும் மேற்பட்ட உடற்கல்வித்துறை பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். கூட்ட ஏற்பாட்டினை பாரதிதாசன் பல்கலைக்கழக விளையாட்டுக்குழு கன்வீனரும்,  கல்லூரி உடற்கல்வி இயக்குனருமாகிய கே. முருகானந்தம் செய்தார்.
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.