.

Pages

Thursday, July 13, 2017

அமீரகத்தில் பலத்த புழுதிக் காற்று வீசும் ! வானிலை எச்சரிக்கை !!

அதிரை நியூஸ்: ஜூலை 13
அமீரக தேசிய வானிலை மையம் எச்சரித்துள்ளபடி, புஜைரா, அஜ்மான், ஷார்ஜா, உம்மல் குவைன், ராஸ் அல் கைமா ஆகிய வட அமீரக பிரதேசங்களில் இன்று அதிகாலை 5.30 மணிமுதல் துவங்கிய பலத்த புழுதிக்காற்று காலை 10 மணிவரை வீசுவதுடன் இக்காற்றின் தாக்கம் சனிக்கிழமை மாலை வரை நீடிக்கும்.

தற்போது சூடான தட்பவெப்ப நிலையை சந்தித்து வரும் தெற்கு மற்றும் கிழக்கு அமீரகப் பிரதேசங்களில் இன்று மாலையிலும் வார இறுதியிலும் மழை பெய்யக்கூடும். நாட்டின் உட்பகுதியில் 49C டிகிரி வெப்பமும், கடலோரம் மற்றும் மலைப் பிராந்தியங்களில் 39C டிகிரி முதல் 47C டிகிரி வரை வெப்பம் நிலவக்கூடும்.

அமீரகத்தின் தென்கிழக்கு பகுதியிலிருந்து வடகிழக்கு பகுதியை நோக்கி வீசும் காற்றின் வேகம் மணிக்கு 34 முதல் 40 கி.மீ வரை இருக்கும். புழுதிக் காற்றால் ஏற்படும் மங்கலான சூழலால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட நேரிடும் என்பதால் வாகனங்களை கவனமாக இயக்கக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.