.

Pages

Sunday, July 9, 2017

அமீரகத்தில் கலந்துகட்டி அடிக்கும் கடும் வெயிலும், மழையும்!

அதிரை நியூஸ்: ஜூலை 09
இளம்பருவத்தில் நமது மண்ணில் வெயிலுடன் மழையும் சிலவேளை பெய்யும் போது 'ஐ நாய்க்கும் நரிக்கும் கல்யாணம்' என சக வயது சிறார்களுடன் குதூகலித்தது மனக்கண்ணுக்குள் வந்து போனது ஆனால் நமது வாரிசுகளின் காலம் அதை ஒருமுறையேனும் அனுபவித்திருக்குமா என்பது சந்தேகமே.

சரி அமீரகத்திற்குள் வருவோம், கொளுத்தும் வெயில் வெளியே தலைகாட்ட முடியாமல் செய்திருக்கின்ற அதேவேளை அமீரகத்தின் சில பகுதிகளில் தூறலும், மிதமானது முதல் கனமான மழையும் என தாலாட்டிச் சென்றுள்ளது.

அமீரகத்தின் உட்பகுதிகளும் மலைப்பிரதேசங்களும் நேற்றைப் போலவே 43 முதல் 50 டிகிரி வரை தகிக்கும் அதேவேளையில் புஜைரா போன்ற நாட்டின் கிழக்குப் பகுதிகளில் மழை நேற்றும் (சனி) பெய்தது (ஞாயிறு) அது இன்றும் நாளையும் (திங்கள்) தொடரும் என அமீரக வானிலை முரண்பாட்டை சொல்லியுள்ளது 'அமீரக தேசிய வானிலை மையம்'.

அல் சுவைப், அல் அய்ன், புஜைரா, மஸாபி போன்ற பிரதேசங்கள் மழையால் ஓரளவு குளிர்ந்துள்ள நிலையில் ஏனைய பிரதேசங்களும் மலைப்பிராந்தியங்களும் புழுதிக் காற்றுடன் சூடேறி தகிக்கின்றன.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.