.

Pages

Sunday, July 9, 2017

ஹஜ் செய்திகள்: உள்நாட்டு ஹஜ் பயணிகள் மீதும் 400 ரியால் கட்டணம் விதிப்பு !

அதிரை நியூஸ்: ஜூலை 09
சவுதி அரேபிய உள்நாட்டு ஹஜ் பயணிகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு எதிர்வரும் ஜூலை 24 ஆம் தேதி முதல் துவங்கவுள்ளது. சவுதி அரேபிய உள்நாட்டு ஹஜ் யாத்ரீகர்கள் தனிப்பட்ட முறையில் ஹஜ் ஏற்பாடுகளை செய்து கொள்ள முடியாது, அவர்களும் அரசால் அனுமதிக்கப்பட்ட ஹஜ் ஏற்பாட்டாளர்கள் எனும் ஏஜென்டுகள் வழியாக மட்டுமே அனைத்து நடைமுறைகளையும் மேற்கொள்ள முடியும்.

இத்தகைய ஹஜ் ஏற்பாட்டு அலுவலகங்களின் நிர்வாகப் பணிகள் (Administration), வரவேற்பரை பணிகள் (Reception) மற்றும் தரவுச் செயலாக்கப் பணிகள் (Data Processing) ஆகியவற்றிற்கு சவுதி அரேபியர்களை மட்டுமே வேலைக்கு அமர்த்த வேண்டும் என்ற கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒவ்வொரு ஹஜ் மற்றும் உம்ரா பயணிகளுக்காகவும் 400 ரியால் தொகையை ஹஜ் ஏற்பாட்டாளர்கள் செலுத்த வேண்டும். ஹஜ் ஏற்பாடுகளுக்காக யாத்ரீகர்களிடமிருந்து வசூலிக்கும் மொத்த சேவைக் கட்டணத்தில் 30 சதவிகித கட்டணத்தை (400 ரியால்) ஹஜ் மற்றும் உம்ராவுக்கான அமைச்சகத்தின் வங்கிக் கணக்கில் வங்கி உத்தரவாதத் தொகையாக (Bank Guarantee) செலுத்த வேண்டும் எனவும் ஹஜ் மற்றும் உம்ராவுக்கான அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

ஹஜ் யாத்ரீகர்கள் தங்களது பயணத்தை ரத்து செய்யும்பட்சத்தில் அவர்களுடைய பணம் மீண்டும் திரும்ப கிடைப்பதை உறுதி செய்வதற்காகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும், இந்தக் கட்டணத்தை காரணம் காட்டி ஹஜ் ஏற்பாட்டாளர்கள் தங்களது சேவைக் கட்டணத்தை அதிகரிக்கக்கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளனர். இந்த வைப்புத்தொகை கட்டணங்கள் மூலம் சுமார் 86 மில்லியன் ரியால் வசூலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.