குழந்தைகளை பெற்றுக் கொள்வதும், தத்து வளர்ப்பதும் சாதாரண விஷயமல்ல. குழந்தைகளிடம் பெற்றோர்கள் தங்களது முரட்டுத்தனங்களை, முட்டாள்தனங்களையும் வெளிக்காட்டவே கூடாது. அன்பும் ஆதரவான வார்த்தைகளும் சிலவேளைகளில் நாமும் ஒரு குழந்தையாக மாறிவிடுவதுமே அவர்களை நாம் வெல்லும் வழி, இது தவறினால் என்னவாகும் என்பதை கீழ்வரும் சம்பவம் வழியாக தெரிந்து கொள்ளுங்கள்.
அமெரிக்காவின் டல்லாஸின் புறநகரான ரிச்சர்ட்சன் எனும் ஊரில் வசிப்பவர் வெஸ்லி மேத்யூஸ் (வயது 37). இவர் சற்றே மூளை வளர்ச்சி குறைபாடுடைய ஷெரின் என்ற 3 வயது இந்தியப் பெண் குழந்தையை பஞ்சாப் மாநிலத்திலிருந்து தத்தெடுத்து மனைவியின் துணையோடு வளர்த்து வந்தார். கடந்த சனிக்கிழமை அன்று குழந்தை ஷெரின் பால் குடிக்காமல் அடம்பிடித்தாள் என்பதற்காக தண்டனையாக தனது வீட்டிற்கு வெளியே சந்து ஒன்றின் மரத்தடியில் இரவு சுமார் 3 மணியளவில் குழந்தையை தனியே விட்டுவிட்டு வந்துவிட்டார்.
15 நிமிடங்கள் கழித்த பின் மீண்டும் மரத்தடியில் குழந்தையை தேடிய மேத்யூஸிற்கு ஏமாற்றமே மிஞ்சியது. சுமார் 5 மணிநேர சுயதேடலுக்குப் பின்பே ரிச்சர்ட்சன் போலீஸாரிடம் சென்றார். மேலும், ஓநாய் ஏதும் இழுத்து சென்றிருக்கலாம் என்றும் தனது சந்தேகத்தை தெரிவித்தார் ஆனால் குழந்தையை மிருகங்கள் ஏதும் இழுத்துச் சென்றதற்கான தடயங்கள் ஏதும் இல்லை என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
குழந்தை ஷெரின் காணாமல் போவதற்கு காரணமாக இருந்தது, 5 மணிநேர தாமதத்திற்குப் பின் போலீஸிடம் புகார் செய்தது மற்றும் முரட்டுத்தனமாக தண்டனையை வழங்கியது ஆகிய குற்றங்களுக்காக வெஸ்லி மேத்யூஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
குழந்தைகளுடன் மென்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை பொதுவாக அறிவுறுத்துவதற்காகவே இச்சம்பவம் பதியப்படுகின்றது.
Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

Kaatu miraandi...he should be hanged....in public
ReplyDelete