சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் பெட்ரோல் நிரப்பிக் கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தது. அப்போது சவுதியர் ஒருவர் துணிவுடன் தனது SUV ரக காரைக் கொண்டு எரியும் காரை துணிவுடன் மோதித்தள்ளி அப்புறப்படுத்தினார். இதனால் அவரது காரின் முன்புறமும் டயர்களும் தீயால் சேதமடைந்தாலும் பெட்ரோல் பங்கில் ஏற்படவிருந்த பெரும் தீ விபத்தும் அதனால் ஏற்படக்கூடிய இன்னபிற ஆபத்துக்களும் தவிர்க்கப்பட்டது.
சமயோசிதத்துடனும் துணிவுடனும் செயல்பட்ட அந்த சவுதிக்காரரின் பெயர் மற்றும் இதர விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை.
வீடியோ:
https://www.khaleejtimes.com/region/saudi-arabia/video-hero-risks-his-own-life-pushes-burning-car-out-of-petrol-pump
Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

Heroic efforts of a Arabian Heeeeeeeeero
ReplyDelete