தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி 14 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் தார்சாலை மற்றும் சிமெண்ட் சாலைக்குப் பதிலாக நவீன முறையில், 'பேவர் பிளாக்' எனும், சிமென்ட் காங்கிரிட் கல்லில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அதிராம்பட்டினம் பேரூராட்சி பொதுநிதி ரூ. 4.30 லட்சம் மதிப்பீட்டில், 14 வது வார்டு காலியார் தெரு - வெற்றிலைக்காரத்தெருவை இணைக்கும் சந்து பகுதியில், தற்போது பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. பணிகளை, அதிராம்பட்டினம் பேரூராட்சி 14 வது வார்டு முன்னாள் கவுன்சிலர் முகமது சரீப் இன்று சனிக்கிழமை மாலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதன் தொடர்ச்சியாக, காலியார் தெருவில் உள்ள குறுகலான 4 சந்து பகுதிகளில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி நடைபெற உள்ளது.







பேரூராட்சியின் பொதுநிதியிலிருந்து பேவேறாக வேலைப்பார்க்கிறார்கள்... ஊரில் கழிவுகளை அகற்ற போதுமானநடவடிக்கை இல்லை காரணம் ஆள் குறைவு அல்லது வாகனமில்லை என்றார்கள்.., இப்போ மக்களின் நிதியிலிருந்து சிமெண்ட் கல்லில் ரோடு அதே பகுதியில் அதாவது மார்க்கெட்டில் தினமும் கொட்டும் கழிவுகளால் சுற்றியுள்ள (புது தெரு ) மக்கள் அசுத்த காற்றை சுவாசிக்கிறார்கள்., அக்கழிவுகளை தினமும் அகற்றினால் என்ன? கடற்கரை ரயில் நிலையத்தில் தண்ணீர் தேங்கியவாறு இருக்கு இதை யாரு அகற்றுவார்? முன்னாள் தலைவர்கள் தேர்தலை கருதி நடவடிக்கை எடுக்கலாமே! அதிரையில் சுத்தமான குடிநீர் சுத்தமான காற்று என்று பேச்சுக்கு இடமில்லாமல் போகிறது என்பது வேதனையான செய்தி.
ReplyDeleteDEAR BROTHERS ..Pls don't discourage the development projects of our street roads.Is anything wrong with this development projects?? Pls ensure we all encourage such benefits for our GREEN AND CLEAN OF MODERN ADIRAI...INSHA ALLAH
ReplyDelete