அதிராம்பட்டினம், அக்.16
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் சேது ரோட்டை சேர்ந்த இளைஞர் என். காலித் அகமது (23). சென்னை எஸ்.டி.பீட்டர்ஸ் பல்கலைக்கழகத்தில் பொறியியல் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர். உறவுகள் அறக்கட்டளை என்ற தொண்டு அமைப்பின் மூலம் தன்னார்வலர்களை இணைத்துக்கொண்டு பொதுநல சேவையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், உறவுகள் அறக்கட்டளை சேவை அமைப்பின் சமூகத் தொண்டினை பாராட்டி, உலக இளைஞர் பேரவை சார்பில், விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ அப்துல் கலாம் 86-வது பிறந்த தினத்தில், சென்னை குரோம்பேட்டை எம்.ஐ.டி கல்லூரி அரங்கில் (அக்.15) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவில், தமிழக அளவில் பொதுநல சேவைகளில் ஈடுபட்டோர் மற்றும் சிறந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட 20 பேருக்கு டாக்டர் ஏ.பி.ஜெ அப்துல் காலம் பொதுநல சேவை விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்துகொண்டு விருதுகளை வழங்கி பாராட்டுத் தெரிவித்தார். இதில், உறவுகள் அறக்கட்டளைக்கு பொதுநல சேவை விருது வழங்கப்பட்டது. அவற்றை அதன் நிறுவனர் என். காலித் அகமது பெற்றுக்கொண்டார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.