தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் சம்சுல் இஸ்லாம் சங்க செயற்குழு - பொதுக்குழு கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு.
மவ்லவிகள் முகமது இப்ராஹீம், முகமது யூசுப், அப்துல் ஹாதி ஆகியோர் வழிகாட்டுதல் பேரில், அதிராம்பட்டினம் சம்சுல் இஸ்லாம் சங்க செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், முஹ்ரம் பிறை 13 ல், ( அக்.3 ) புதுமனைத்தெரு சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு, சம்சுல் இஸ்லாம் சங்கத் தலைவர் ஹாஜி ஹசன் தலைமை வகித்தார். செயலர் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், சம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாக எல்லைக்குட்பட்ட 15 பள்ளிவாசல்கள் நிர்வாகக் கமிட்டி சார்பில், பரிந்துரைக்கப்பட்ட தலா 3 பேர் வீதம், மொத்தம் 45 பேர் போட்டியாளர்களாக கலந்துகொண்டனர். இதில், தலைவராக மு. அபூபக்கர் ( மப்ரூர் பள்ளிவாசல் ), செயலாளராக அ. அப்துல் காதர் ( தக்வா பள்ளிவாசல் ), பொருளாளராக ஜெ. அகமது கபீர் ( செக்கடிப் பள்ளிவாசல் ), துணைத்தலைவராக அ. முகைதீன் மன்சூர் ( ரஹ்மானியா பள்ளிவாசல் ), இணைச்செயலராக அ. அப்துல் ரஹீம் ( இஜாபா பள்ளிவாசல் ) ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 40 பேரில் 25 பேர் செயற்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். இவர்களின் பதிவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும். புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்களுக்கு மஹல்லாவாசிகள் பலர் வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர்.
சிஷ்வா அமைப்பின் குழும ஒருங்கிணைப்பாளர் மு.செ.மு சபீர் அகமது புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்துக்கொண்ட போது எடுத்த படங்கள்...



அனைத்து புதிய நிர்வாகிகளுக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅனைத்து புதிய நிர்வாகிகளுக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்
ReplyDeleteS I S ....tondullam padaitha puthiya talaivargalukku iniya vaazthugal... SEVAI. TONDU. JUSTICE .
ReplyDelete