தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் செட்டித்தெருவை சேர்ந்தவர் மீராஷா (43). உணவகத் தொழிலாளி. அதிரையர் பெரும்பாலானோருக்கு நன்கு பரிச்சையமாணவர். இவருக்கு ஜெஹபர் நாச்சியா என்ற மனைவியும், 5 ம் வகுப்பில் கல்வி பயிலும் 9 வயது மகன் மற்றும் 2 ம் வகுப்பில் கல்வி பயிலும் 6 வயது மகள் என 2 பேர் உள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இவருக்கு தொடர் வயிற்று வலி ஏற்பட்டு, தூத்துக்குடி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில், வயிற்றில் புற்றுநோய் கட்டி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, கடந்த மார்ச் மாதம் முதல் கேரளா மாநிலம், திருவனந்தபுரம் ரிஜினல் கேன்சர் சென்டர் மருத்துவமனையில் 'ஹீமோதெரபி' மருத்துவ சிகிச்சை எடுத்து வருகிறார்.
மருத்துவர்கள் 8 முறை கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரைத்ததின் பேரில், இதுவரையில் உறவினர்கள், நண்பர்கள் மூலம் திரட்டிய நிதி உதவியைக்கொண்டு 6 முறை கீமோதெரபி சிகிச்சை மேற்கொண்டுள்ளார். ஒரு முறை கீமோதெரபி சிகிச்சைக்கு ரூ. 30 ஆயிரம் வரை செலவு ஆவதாகவும், மருத்துவர்கள் அறிவுரையின் படி மீதமுள்ள 2 முறை கீமோதெரபி சிகிச்சை தொடர மொத்தம் ரூ 60 ஆயிரம் வரை செலவு ஆகும் என தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், பாப்புலர் ப்ராண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பில், பட்டுக்கோட்டை டிவிசன் முன்னாள் பிரசிடெண்ட் வழக்குரைஞர் நிஜாமுதீன் ரூ. 21,370/- மருத்துவ நிதி உதிவியை பயனாளியிடம் இன்று புதன்கிழமை வழங்கினார். அருகில், எஸ்.டி.பி.ஐ கட்சி அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் முகமது அஜார் உடனிருந்தார். நிதி உதவியை பெற்றுக்கொண்ட மீராஷா, பாப்புலர் ப்ராண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.


Zindabaad zindaabaad popular front ZINDAABAAD
ReplyDelete