மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் 86 வது பிறந்த தினத்தையொட்டி, அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில், அறிவியல் படைப்பு மற்றும் புத்தகக் கண்காட்சி இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கண்காட்சிக்கு, பள்ளி முதல்வர் மீனா குமாரி தலைமை வகித்தார்.
ஈஸ்ட் கோஸ்ட் அகதெமி சிபிஎஸ்இ பள்ளி இயக்குநர் டி.வி ரேவதி கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
அறிவியல் கண்காட்சியில், மாணவ, மாணவிகளின் 122 படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இதில் நடுவர்களாக, காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர்கள் என்.ஏ முகமது பாருக், எஸ்.ராஜா முகமது, ஆயிஷா மரியம், எஸ்.அபிநயா ஆகியோர் கலந்துகொண்டு சிறந்த படைப்புகளை தேர்வு செய்தனர்.
இதில், கீழோர் பிரிவில், ஜெ. முகமது பைஜ், ஏ.ஆஷிகா, ஆர்.சமீமா ஆகியோர் முதலிடமும், அப்துல் காதர், இஸ்மாயில், எம்.ஜூல்பா ஆகியோர் இரண்டாமிடமும், எச். முஜாமில், ஜெ. அஸீலா ஆகியோர் மூன்றாமிடமும், மேலோர் பிரிவில், ஜபீர், ஹனீப், என்.ஷிபானா ஆகியோர் முதலிடமும், முகமது இப்ராஹீம், சபீக் அகமது, நசீமா ஆகியோர் இரண்டாமிடமும், அஜய், சக்தி ஆனந்தம், ரஸ்மின் சுஹரா, எம்.பி. முஹ்சினா ஆகியோர் மூன்றாமிடமும், மேன்மேலோர் பிரிவில், ஜெ.அகமது தஸ்லீம், என்.ஜூல்பா ஆகியோர் முதலிடமும், அப்சர், பைஜ், பி. மொஹிரா, என்.ஹவ்வா ஆகியோர் இரண்டாமிடமும், ஜெ.ஆதிப், ஏ.எஸ் பத்திலா,எஸ். ஜுல்பிகா ஆகியோர் மூன்றமிடமும் பிடித்தனர். வெற்றி பெற்றோருக்கு பாராட்டுச் சான்றிதழ், நினைவுப் பரிசு, புத்தகங்கள் வழங்கப்பட்டன.
புத்தகக் கண்காட்சியில் கல்வி, அறிவியல், ஆரோக்கியம், மொழி, பொதுஅறிவு, நீதிக்கதைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தலைவர்கள் வரலாறு, தலைமைப் பண்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்பின் கீழ், 10 ஆயிரம் புத்தகங்கள் இடம் பெற்றன.
கண்காட்சிக்கு, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஓ.கே.எம் சிபஹத்துல்லா, துணைச்செயலர் எம்.எப் முகம்மது சலீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்காட்சியில் பள்ளி ஆசிரியர்கள் பார்த்தசாரதி, கார்த்திகேயன், முகமது இத்ரீஸ், சத்தியசீலன், கமலக்கண்ணி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மற்றும் ஈஸ்ட் கோஸ்ட் அகதெமி சிபிஎஸ்இ பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.






வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். மூன்றாம் இடம் பெற்றிருக்கும் இருவர் என் பிள்ளைகள். 11 ஆம் வகுப்பு மாணவன் 'ஆதிப்' என்று திருத்தவும். நன்றி.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவெற்றிப்பெற்ற மாணவச்செல்வங்களுக்கு வாழ்த்துக்கள். பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த +2 பிரிவில் நீர் வீழ்ச்சி மூலம் தண்ணீர் சேகரிப்பு ஏனோ பள்ளி நிர்வாகம் முதல் பரிசுக்கு தேர்ந்த்து எடுக்க வில்லை.அரசியல் லா?
ReplyDeleteநினைவில் நிற்கும் கலாமின் கவிதைகள் .....
ReplyDelete“நான் பிறந்தேன் அரும்பெரும் சக்தியுடன்,
நான் பிறந்தேன் நற்பண்புகளுடன்,
நான் பிறந்தேன் கனவுடன்,
வளர்ந்தேன் நல்ல எண்ணங்களுடன்,
நான் பிறந்தேன் உயர் எண்ணங்களை செயல்படுத்த,
நான் பிறந்தேன் ஆராய்ச்சி உள்ளத்துடன்,
நான் பிறந்தேன் என்னால் முடியும்
என்ற உள்ள உறுதியுடன்,
நான் பிறந்தேன் ஆகாய உச்சியில் பறக்க,
நான் பூமியில் ஒரு போதும் தவழமாட்டேன்,
தவழவே மாட்டேன், ஆகாய உச்சிதான் என் லட்சியம்,
பறப்பேன், பறப்பேன்,
வாழ்வில் பறந்துகொண்டே இருப்பேன்”
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். முதல் இடம் பெற்றிருக்கும் என்.ஷிபானா எனது மகள் .கே.நிஜாமுதீன் JEBEL ALI DUBAI
ReplyDelete