.

Pages

Saturday, November 10, 2018

தமிழக கால்பந்து அணிக்கு காதிர் முகைதீன் பள்ளி மாணவன் தேர்வு (முழு விவரம்)

அதிராம்பட்டினம், நவ.10
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 8 ஆம் வகுப்பு மாணவன் ஏ.எஸ் முகமது ஆத்திப் (13) த/பெ. அப்துல் சுக்கூர். இவர், அகில இந்திய பள்ளிகளின் விளையாட்டு குழுமம் (SGFI) சார்பில், 14-வயதுக்கு உட்பட்ட தமிழக கால்பந்து அணியில் பங்கேற்கும் வீரர்களுக்கான தேர்வு தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், மண்டல அளவிலான கால்பந்து போட்டிகளில் வென்ற 80 க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்டு விளையாடினர். இதில், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன்  ஏ.எஸ் முகமது ஆத்திப் கலந்துகொண்டு, தமிழக கால்பந்து அணிக்கு தேர்வு பெற்றுள்ளார். இதையடுத்து, இவர் வரும் நவ.26 ந் தேதி அசாமில் நடைபெறும் அகில இந்திய கால்பந்து போட்டியில் தமிழக அணி சார்பில் கலந்துகொண்டு விளையாட உள்ளார்.

இதையடுத்து, அகில இந்திய கால்பந்து போட்டியில் விளையாட தகுதி பெற்ற மாணவன் ஏ.எஸ் முகமது ஆத்திப் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் ஏ.ராஜா, ஏ.ஜெயகாந்தன் ஆகியோரை, காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்கள் செயலர் எஸ்.ஜெ அபுல் ஹசன், பள்ளித் தலைமை ஆசிரியர் ஏ.எல் அஸ்ரப் அலி, பள்ளி ஆசிரியர்கள், பள்ளி அலுவலகப் பணியாளர்கள், மாணவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவன் அபூபக்கர் அல்பனா 17-வயதுக்கு உட்பட்ட அகில இந்திய கால்பந்து போட்டியில் தமிழக அணி சார்பில் கலந்துகொண்டு விளையாடியது குறிப்பிடதக்கது. கடந்த சில ஆண்டுகளாக பள்ளி மாணவர்கள் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வென்று தொடர்ந்து சாதனை நிகழ்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. Congratulation for Concerned Student,Mr.Jayagandan,Mr.Raja,HM & AHMs

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.