கலவரம் தொடர்பாக மல்லிப்பட்டினம் ரகுமான்கான் (வயது 26), லாம்தீன் (30), முகமது மஜீது (32), சாகுல் ஹமீது (30), முகமது ஹபீஸ்(22), அபுபைதா (47), நவாப்கான் (37), சையது இப்ராம் (47), பசுலுல் ஹக் (67), ஹாஜா (36), பைசல்கான் (22), முகமது அஸ்கர் (26), இத்தியாக்அமீது (28), முகமது இர்பான் (28), நசுருதீன் (34), முகமது யாசின் (51), ரஸ்க்அல்லா (23), முகைதீன் சேக் (30), லுத்துபுல்லா (46) மற்றும் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த பிஸ்மில்லாகான் (27) ரகுமத்துல்லா (30) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த சில வாரங்களாக மல்லிபட்டினம் ஜமாத்தினரும், எஸ்டிபிஐ கட்சியினரும் கைதுசெய்யப்பட்டவர்களை வெளியில் கொண்டுவர கடும் முயற்சியில் ஈடுபட்டதாக தெரிகிறது. இவர்களின் முயற்சிக்கு பலனளிக்கும் வகையில் சிறையில் அடைக்கப்பட்ட அனைவரும் நேற்று முன்தினம் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.
கலவர பகுதிகளை மனித நேயமக்கள் கட்சியின் சார்பில் மாநில பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பி.அப்துல் ஹமீது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தஞ்சை மாவட்டதலைவர் பிஎஸ் ஹமீது ஆகியோர் தலைமையில் அந்தந்த கட்சிகளின் நிர்வாகிகள் மல்லிபட்டினத்திற்கு நேரில்சென்று ஆய்வு நடத்தி கைதானோர் வெளியே வர உதவுதாக ஜமாத்தினரிடம் கூறியது குறிப்பிடத்தக்கது.
மல்லிபட்டினம் ஜமாத்தினர் கைதுசெய்யப்பட்டவர்களை வெளியில் கொண்டுவர உதவவில்லை. கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்களின் முயற்சியில் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். குறிப்பிடத்தக்கது....
ReplyDeleteத.த.ஜ கூட இந்த விஷயத்தை கண்டுகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது..
ReplyDelete