.

Pages

Monday, May 5, 2014

குழாய் உடைப்பால் குடிநீரில் மண் கலக்கும் அபாயம் !

அதிரை பேரூராட்சி சார்பில் பொதுநிதிதிட்டம்- 2012-2013 ன் கீழ் 6.10 லட்சம் செலவில் பட்டுக்கோட்டை சாலையில் [ கல்லு பட்டறை அருகில் ] புதிதாக போர்வெல் மற்றும் ரூம் அமைத்து குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. இந்த பணிகள் அனைத்தும் நிறைவுற்ற நிலையில் அதன் அருகே புதைக்கப்பட்ட குழாய்களின் இருவேறு இடங்களில் தண்ணீர் கசிந்து ஓடிக்கொண்டிருக்கிறது. குழாய்களில் ஏற்பட்டுள்ள ஓட்டைகளால் அந்த பகுதிகளுக்கு செல்லும் குடிநீரில் மண் கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதியினர் நம்மிடம் கூறுகையில்...
'விலை மலிவாக கிடைக்கிறது என்பதற்காக இந்த பணிகளுக்கு பயன்படுத்தும் தரமற்ற பைப்புகளால் அடிக்கடி குழாய் உடைப்பு ஏற்படுகிறது. இதனால் கூடுதல் செலவுகள் ஏற்படுவதுடன் குடிநீரும் வீண் விரயமாகின்றன. குளம் போல அருகில் தேங்கியும் காட்சியளிக்கின்றன. அதிரையில் சில பகுதிகளில் போதுமான அளவு குடிநீர் கிடைக்காத நிலையில், இதுபோன்று குடிநீர் வீணாக விரயமாவதை தடுக்கப்பட வேண்டும், சம்பந்தபட்ட பேரூராட்சி நிர்வாகம் முறையாக ஆய்வு செய்து இவற்றை சரிசெய்ய உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்' என்கின்றனர்.









6 comments:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    யாருங்க வேலையை சரியாக செய்யுறது?.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED.
    Consumer & Human Rights
    Thanjoor District Organizer. Adirampattinam-614701.
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. காண்ட்ராக்டர் கொடுக்கும் 10 பெர்சென்ட் கமிசனுக்காக நாக்கை தொங்க போட்டுள்ள எந்தொவொரு கவுன்சிலரும், அதிகாரியும் கண்டுகொள்ள மாட்டங்க

    எல்லா இடத்திலேயும் இதே நிலைமைதான். இவனுக்கு அவன் பரவாயில்லே, அவனுக்கு இவன் தேவலைங்கிரதெல்லாம் சுத்த வேஸ்ட்

    எல்லாமே பணம், துட்டு, மணி

    ReplyDelete
  4. குடிநீர் தினமும் பரிசோதித்தபின்பே வினியோகம் என்ற நிலை இருந்தால் தான் இதுபோன்ற மாசு இல்லா சுத்தம்மான குடிநீர் கிடைக்கும் அதற்க்கு நமதூர் ஜேர்மன் பொறுப்பேற்க்க வேண்டும் என்று இதன் மூலம் பொதுமக்கள் சார்ப்பாக கேட்டுக்கொள்கிறேன். செய்வாரா?

    ReplyDelete
  5. குடிநீர் தினமும் பரிசோதித்தபின்பே வினியோகம் என்ற நிலை இருந்தால் தான் இதுபோன்ற மாசு இல்லா சுத்தம்மான குடிநீர் கிடைக்கும் அதற்க்கு நமதூர் ஜேர்மன் பொறுப்பேற்க்க வேண்டும் என்று இதன் மூலம் பொதுமக்கள் சார்ப்பாக கேட்டுக்கொள்கிறேன். செய்வாரா?

    ReplyDelete
  6. குழாய் உடைப்பு தண்ணீரில் மண் கலப்பு. இனிவரும் தலைப்புகள் எப்படி இருக்கும் போட்ட தார் ரோட்ல மண் தெரியுது எதிர்பார்க்கப்படுகிறது.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.