.

Pages

Saturday, May 3, 2014

ஷார்ஜாவில் நடைபெற்ற கடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் செயற்குழு கூட்டம் !

கடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் 21 ஆவது செயற்குழு கூட்டம், நேற்று வெள்ளி கிழமை (02-05-2014) மஃக்ரிப் தொழுகைக்கு பிறகு துணைத் தலைவர் SMA சாகுல் ஹமீது அவர்கள் தலைமையில் ஷார்ஜாவில் உள்ள சகோதரர் PMS அல்-அமீன் அவர்கள் இல்லத்தில்  சிறப்பாக நடைபெற்றது.

கீழ்க்கண்ட தீர்மானங்கள் எடுக்கப்பட்டது:
1. கல்வி விழிப்புணர்வு மாநாடு வருகின்ற 30 அல்லது 31 ஆம் தேதி நடத்துவது என்றும் மற்றும் அதற்கான ஏற்பாட்டினை அமீரக அமைப்பு பொருப்பேற்றுக் கொள்ளும்.

2. இளைஞர் நற்பணி மன்ற புதிய நிர்வாக அமைப்பினர்களுக்கு வாழ்த்து கடிதம் அனுப்புவது என்றும்.

3. உயர் கல்வி உதவித் தொகை விஷயமாக வருகின்ற பொதுக்குழுவில் தீர்மானிக்கப்படும் என்றும்.

4. பொதுக்குழுக் கூட்டம் அடுத்த மாதம் 6 ( ஜுன் ) ஆம் தேதி சகோதரர் இஸ்மாயில் அவர்கள் இல்லத்தில் நடைபெறும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

3 comments:

  1. // கல்வி விழிப்புணர்வு மாநாடு வருகின்ற 30 அல்லது 31 ஆம் தேதி நடத்துவது என்றும் மற்றும் அதற்கான ஏற்பாட்டினை அமீரக அமைப்பு பொருப்பேற்றுக் கொள்ளும் //

    கடந்த வருடத்தை போல் கல்வி விழிப்புணர்வு மாநாடு இந்த வருடமும் சிறப்பாக அமைவதற்கும், இதை ஏற்று நடத்தும் அமீரக அமைப்பினர் - கடற்கரைதெரு ஜமாத்தினர் ஆகியோருக்கு என் வாழ்த்துக்கள்..

    அதேவேளையில் அதிரை பைத்துல்மால் சார்பில் எதிர்வரும் மே 30,31, ஜூன் 1 ஆகிய நாட்களில் திருக்குர்ஆன் மாநாட்டை அதிரையில் நடத்த முடிவு செய்துள்ளனர். அதிரையில் ஒரே நாளில் இருவேறு நிகழ்வுகள் நடப்பதை தவிர்க்கும் பொருட்டு வேறொரு நாளில் நடத்துவதற்கு முயற்சியை மேற்கொள்ளலாம்.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    கடந்த வருடத்தை போல் கல்வி விழிப்புணர்வு மாநாடு இந்த வருடமும் சிறப்பாக அமைவதற்கும், இதை ஏற்று நடத்தும் அமீரக அமைப்பினர் - கடற்கரைதெரு ஜமாத்தினர் ஆகியோருக்கு என் வாழ்த்துக்கள்..

    அதேவேளையில் அதிரை பைத்துல்மால் சார்பில் எதிர்வரும் மே 30,31, ஜூன் 1 ஆகிய நாட்களில் திருக்குர்ஆன் மாநாட்டை அதிரையில் நடத்த முடிவு செய்துள்ளனர். அதிரையில் ஒரே நாளில் இருவேறு நிகழ்வுகள் நடப்பதை தவிர்க்கும் பொருட்டு வேறொரு நாளில் நடத்துவதற்கு முயற்சியை மேற்கொள்ளலாம்..

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED.
    Consumer & Human Rights
    Thanjoor District Organizer. Adirampattinam-614701.
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.