.

Pages

Thursday, May 8, 2014

அதிரை பேரூராட்சியின் அலட்சிய போக்கால் வீண் விரயமாகும் மக்கள் வரிப்பணம் ! [ படங்கள் இணைப்பு ]

அதிரை பேரூராட்சி உட்பட்ட பகுதிகளில் குப்பை கூளங்களை ஓரிடத்தில் சேமிப்பதற்காக ஆங்காங்கே குப்பை தொட்டிகளையும், அவற்றை அள்ளுவதற்காக, டிராக்டர் வாகனங்களையும், மூன்று சக்கர குப்பை வண்டிகளையும் பயன்படுத்துவது வழக்கமாக இருந்துவருகிறது.

பேரூராட்சியின் சார்பில் இந்த பணிகளுக்காக தினமும் காலை நேரங்களில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டு வருவார்கள். இதனால் நகரின் முக்கிய பகுதிகளில் தேங்கி காணப்படும் குப்பை குளங்கள் அள்ளப்பட்டு அந்த பகுதிகள் தூய்மையாக காட்சியளிக்கும்.

நகரின் சுகாதாரத்தை பாதுகாக்க ஆணிவேறாக இருந்து பயன்படும் குப்பை தொட்டிகளும், குப்பைகளை அள்ளிச்செல்லும் மூன்று சக்கர வாகனமும் நீண்ட காலமாக நகரின் முக்கிய பகுதிகளில் கேட்பாரற்று காணப்படுவது பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதுகுறித்து 'சமூக ஆர்வலர்' ஜமால் முஹம்மது நம்மிடம் கூறுகையில்...
'நகரில் குமியும் குப்பைகளை அள்ளுவதற்காக அதிரை பேரூராட்சிக்கு உதவும் வகையில் அதிரையை சேர்ந்த தன்னார்வலர்கள் சிலர் தானாக முன்வந்து குப்பை வண்டிகளை இலவசமாக வழங்கினார்கள். அதேபோல் அதிரை பேரூராட்சியின் சார்பில் மக்கள் வரிப்பணத்தை கொண்டு குப்பை தொட்டிகளும், மூன்று சக்கர வாகனங்களும் வாங்கப்பட்டது.

நகரை தூய்மை படுத்தும் நோக்கில் குப்பை கூளங்கள் சிதறாமல் ஓரிடத்தில் சேமிக்கவும், அவற்றை முறையாக எடுத்துச்செல்லவும் பயன்படுத்தப்படும் இந்த வாகனங்கள் இப்படி பல மாதங்களாக தெருவின் முக்கிய பகுதிகளில் ஆங்காங்கே முடங்கி காணப்படுவது அதிர்ச்சியளிக்கிறது. ஏற்கனவே நகரில் குமியும் குப்பைகளை சேமித்து வைப்பதற்கும், அள்ளுவதற்கும் போதுமான வாகனங்கள் இல்லை என்ற குறை ஒருபக்கமிருந்தாலும், இதில் இருக்கிற வாகனங்களும் பயன்படுத்தபடாமல் கேட்பாரற்று கிடப்பது குப்பை கூளங்கள் அதிகளவில் குமிந்துவிடுகிற வாய்ப்பு ஏற்படும்.

அதிரையில் வாழும் சமூக ஆர்வலர்கள், சமுதாய அமைப்புகள் பேரூராட்சியின் அலட்சிய போக்கை மக்கள் மத்தியிலும் - அரசிடமும் எடுத்துரைக்க வேண்டும். இப்படி மக்கள் செலுத்தும் வரிப்பணம் வீண் விரயமாவது தடுக்கப்பட வேண்டும். பேரூராட்சியின் நிர்வாக அலுவலர்கள் - ஊழியர்கள், பிரதிநிதிகள் தங்களின் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும்' என்றார் வருத்தத்துடன்.

இதுகுறித்து பேரூராட்சி அலுவலக வட்டத்தில் விசாரித்த வகையில்...
'பழுதடைந்த குப்பைதொட்டிகளை சரிசெய்யும் பணிக்காக ஈசிஆர் சாலையில் அமைந்துள்ள தவ்ஹீத் பள்ளி அருகே உள்ள வெல்டிங் ஒர்க்ஸ் ஷாப்பில் கொடுத்திருந்தோம். இந்த ஒர்க்ஸ்ஷாப் நீண்ட காலமாக முன்னறிவிப்பின்றி பூட்டப்பட்டிருப்பதால் பழுதுகளை சரிசெய்வதற்காக கொடுக்கப்பட்டிருக்கும் குப்பை தொட்டிகளை திரும்ப பெறுவதில் தாமதமாகின்றன' என்றனர்.

AJ பள்ளி அருகே கேட்பாரற்று காணப்படும் மூன்று சக்கர வாகனம்


ECR சாலையில் உள்ள தவ்ஹீத் பள்ளியின் பின்புறமாக கேட்பாரற்று காணப்படும் குப்பைத்தொட்டிகள்




3 comments:

  1. வீட்டு வரி, தண்ணீர் பில் இவை பொது மக்களிடமிருந்து வசூலிக்கும் பணத்தை பேரூராட்சி நிர்வாகம் என்ன பண்றாங்கன்னு சந்தேகமாக இருக்கு, என்றைக்காவது வெளிப்படையாக நிர்வாகத்தின் செயல் பாடு வெளிவிட்டது உண்டா? இல்ல நம்ம தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள் கேட்டதுண்டா? அப்படி என்றால் எல்லாம் ஊழல் என்று தான் அருத்தம்.

    வாகனங்களை பழுது பார்க்க ஊரில் வேற ஒர்க்க்ஷாப் இல்லையா? தன்னுடைய வாகனத்தை இப்படி போட்டு வைப்பார்களா ?

    கிம்பலத்தை எதிர்பார்க்கும் அரசு அதிகாரிடமிருந்து துரித நடவடிக்கை எதிர்பார்க்க முடியாது இதனை கண்டிக்கும் வகையில் சமூக ஆர்வலர்கள் ஓன்று திரண்டு பூட்டு போடும் போராட்டத்தை தான் நடத்த வேண்டும் அல்லது மேலதிகாரிகளுக்கு இதன் கவனத்தை கொண்டு போக வேண்டும்.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    பொது மக்கள் பேரூர் நிர்வாகத்தின் மீது வைத்து இருக்கும் நம்பிக்கைக்கு குந்தகம் வராமல் சேவைகள் இருக்க வேண்டும். இந்த நிர்வாகம் சிறிய நிர்வாகமாக இருந்து இன்று பேரூர் நிர்வாகமாக இருக்கின்றது, நிர்வாகத்தின் தரம் உயர்ந்துள்ளது, ஆனால் சேவைகளின் தரம் உயரவில்லை, பொதுமக்களை திருப்திபடுத்த சேவைகள் சரியாக இருக்க வேண்டும்.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED.
    Consumer & Human Rights
    Thanjoor District Organizer. Adirampattinam-614701.
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  3. வாகனங்களை பழுது பார்க்க ஊரில் வேற ஒர்க்க்ஷாப் இல்லையா? தன்னுடைய வாகனத்தை இப்படி போட்டு வைப்பார்களா ? இன் நிலை நீடித்தால் பேரூர்ரை மக்கள் முடக்கி மூடுவிழா நடத்துவார்கள்..

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.