.

Pages

Thursday, May 8, 2014

தொடர் மழையால் அதிரை பொருட்காட்சி மே 15 க்கு ஒத்திவைப்பு !

பொருட்காட்சி நடைபெற உள்ள பள்ளி மைதானம்

அதிரை வர்த்தக மற்றும் கலாச்சார அமைப்பின் சார்பில் கடந்த வருடத்தை போல் இந்த வருடமும் அதிரை மற்றும் அதிரையை சுற்றி வசிக்கக்கூடிய மக்களுக்கு பொழுதுபோக்கு மற்றும் வர்த்தக பயன்பாடுகளை மையமாக வைத்து நடப்பு கல்வி ஆண்டின் விடுமுறை தினங்களில் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் பொருட்காட்சி எதிர்வரும் 11-05-2014 முதல் 25-05-2014 வரை நடைபெற இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு செய்யப்பட்டது.

கடந்த சில நாட்களாக அதிரையில் பெய்துவரும் தொடர் கனமழையால் பொருட்காட்சி நடைபெற இருக்கும் மைதானம் தண்ணீரால் சூழ்ந்து காணப்படுவதால் பணிகள் நடைபெறுவதில் தாமதமாகிறது. இதனால் பொருட்காட்சியை எதிர்வரும் 15-05-2014 முதல் 29-05-2014 வரை சிறப்பாக நடத்தி முடிப்பது என பொருட்காட்சியை ஏற்று நடத்தும் நிர்வாக கமிட்டியினரின் சார்பில் முடிவு செய்து இருப்பதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

2 comments:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    கப்ரு வணக்கம் வேண்டாம் என்று இரு சாராரை கந்தூரி என்ற பெயரில் விமர்சித்து ஒதிக்கி வந்த இந்த கூட்டம் தற்போது கப்ரு இல்லாத இந்த கண்தூரியை ஏற்பாடு செய்து அறிமுகம் செய்கின்றனர் .அப்படிஎன்றால்
    இவர்களுக்கு பணம் சம்பாதிக்க மார்க்க சட்டங்களும் அனாச்சாரங்களும் ஒரு சுமையல்ல .......

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
    Thanjavur District Organizer. Adirampattinam-614701.
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  2. கப்ரு வணக்கம் வேண்டாம் என்று இரு சாராரை கந்தூரி என்ற பெயரில் விமர்சித்து ஒதிக்கி வந்த இந்த கூட்டம் தற்போது கப்ரு இல்லாத இந்த கண்தூரியை ஏற்பாடு செய்து அறிமுகம் செய்கின்றனர் .அப்படிஎன்றால்
    இவர்களுக்கு பணம் சம்பாதிக்க மார்க்க சட்டங்களும் அனாச்சாரங்களும் ஒரு சுமையல்ல .......

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.