கல்யாணம் பண்ணிப் பார், வீட்டைக் கட்டிப் பார். என்று
நம் முன்னோர்கள் அன்றே சொல்லிவிட்டுப் போனார்கள். ஏன் அப்படி சொன்னார்கள்? அதில் சிரமம் இருப்பதினால்தான்
அப்படி சொன்னார்களோ.
விஷேசங்களிலேயே மிகவும் ஒரு
விசேஷித்த விசேஷம் அது கல்யாணம் என்பதைத் தவிர வேறு ஒன்றும் இருக்க முடியாது. ஒரு
ஆணுக்கு ஒரு பெண்ணும், ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணும்
என்று ஜோடியாக இணைவதை நான்கு பேருக்கு மத்தியில் தகுந்த சாட்சிகளோடு
உண்டாக்கப்படும் ஒரு உடன்படிக்கையே கல்யாணமாகும், இதை திருமணம் என்றும் நிக்காஹ்
என்றும் வாழ்க்கை உடன்படிக்கை என்றும் அழைப்பதுண்டு.
ஒவ்வொரு தேசங்களிலும், ஊர்களிலும், குடும்பங்களிலும்
அந்தந்த மார்கங்களுக்கு ஏற்ப கல்யாணங்கள் நடப்பது நம் எல்லோருக்கும் தெரிந்ததே, சில
கல்யாணங்கள் வரவேற்ப்பு கொடுத்து முடிப்பார்கள்., சில கல்யாணங்கள் வரவேற்ப்புடன்
உணவு விருந்தும் கொடுத்து முடிப்பார்கள், இதில் சில கூப்பிட மறந்து
விடுவதும் உண்டு, விடுபட்டவர்
பெயர் கடைசி நேரத்தில் ஞாபகம் வந்ததும் ஓடோடிப் போய் அவரைப் பார்த்து மறக்காமல்
கல்யாணத்திற்கு வந்திடுங்கோ என்று கூப்பிட்டுவிட்டு அப்பாடா என்று ஒரு பெரு மூச்சுடன்
வந்து அமருவதும் உண்டு.
புது உடுப்புகள் எடுத்து, ஆபரணங்கள், உணவு
விருந்துக்கு தேவையான சமையல் சாமான்கள், வண்ணங்களிலும் அழகு
பூக்களிலும் அலங்கரிக்கப்பட்ட மணவறை, மணப்பந்தல், அழகு
ஜோடனைகள், அலங்கார
மின் விளக்குகள், இன்னும்
தேவையானது அனைத்தும் தயார் நிலையில் அந்த கல்யாண வரவேற்ப்பில் கோட்டை விடுவது
அதாவது கல்யாணத்திற்கு வருகிறவர்களை வாங்க என்று கூப்பிட ஆள் இருக்காது. இது
தற்போது நடந்து முடிந்த அனேக கல்யாணங்களில் நான் பார்த்ததுண்டு.
இன்னும் திருமண அழைப்பிதழ்களில்
முறைப்படி பெயர்களை எழுதும் பழக்கம் இப்போது சுத்தமாக நின்று விட்டது. அவரு யாரு
இன்ன பெயரா எழுது அவ்வளவுதான், அவருடைய விலாசம் என்ன, முறை என்ன போன்ற மரியாதை களெல்லாம்
மாறிப் போச்சு. திருமண அழைப்பிதழ் எழுதும்போது பக்கத்தில் பெரியோர்களை வைத்துக்
கொண்டு எழுதினால் இந்த தவறுகளை தவிர்க்கலாம்.
ஊர் விரிந்து விட்டது மூளை
முடுக்கெல்லாம் வீடுகள் வந்து விட்டன, கூப்பாட்டுக்கு வரும் ஆண்களும் சரி,
பெண்களும் சரி, நீங்கள் கூப்பிடும் வீடுகளில் அடுத்த வீடு யாருடையது என்று
விசாரித்தால் ஒரு சமயம் உங்களுக்கு வேண்டப்பட்ட வீடாக கூட இருக்கலாம்.
முன்பெல்லாம் திருமண
அழைப்பிழ்களை எழுதுவதற்கு முன், காலஞ்சென்ற நமதூர் தபால் காரர்களாகிய திரு.
தியாகராஜன், திரு.சவுரிநாதன் இவர்களை அருகில் வைத்து கொண்டு எழுதவது வழக்கம், ஒரு
வீடு பாக்கி இல்லாமல் அப்படியே சல்லடை போட்டமாதிரி இருக்கும்.
தற்போது எல்லாமே இரசாயனமயமாக போய்விட்டது.
கல்யாணத்துக்கு போடும் பந்தலாவது இயற்கையிலான தென்னங்கீற்றினால் வேயப்பட்டதாக
இருக்கட்டுமே, எதுக்கு அதையும் பிலாசிடிக்கால் போடவேண்டும்?
எல்லோருக்கும் வேலை உண்டு, கூப்பிட்ட
மரியாதைக்கு வருகின்றோம், அப்படி வருகின்ற எங்களை வாங்க
என்று கூப்பிட அந்த பந்தலில் ஒரு ஆள் கூட இல்லையென்றால் எங்களுக்கு எப்படி
இருக்கும்.
கல்யாண வீடுகளே, உங்களுக்கும்
கடுமையான வேலைகள் இருக்கும், அந்த வேலைகளோடு எங்களையும்
வாங்க என்று கூப்பிட மறந்து விடவேண்டாம்.
குறிப்பு:- நான் குறை கூற வில்லை, முறை என்று
ஒன்று உள்ளதே அதை மறந்து விடவேண்டாம்.
இப்படிக்கு.
K.M.A.ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
கல்யாண சமையல் சாதம் காய் கறிகளும் பிரம்மாதம். இனி கல்யாண வீடுகளில் சஹான் சோறுக்கு பதில் தனித்தனியாக இலையிலோ அல்லது பிலாட்டிலோ வைத்தால் நல்லது, மறு சோறுக்கு பதில் மறு சஹனை இறக்கி விடுகின்றனர். இது ரொம்ப அநியாயங்க.
ReplyDelete//எல்லோருக்கும் வேலை உண்டு, கூப்பிட்ட மரியாதைக்கு வருகின்றோம், அப்படி வருகின்ற எங்களை வாங்க என்று கூப்பிட அந்த பந்தலில் ஒரு ஆள் கூட இல்லையென்றால் எங்களுக்கு எப்படி இருக்கும்.//
ReplyDeleteபல இடங்களில் வந்தவர்கள் முகம் வதந்கிப்போய் இருப்பது இதனால் தானோ !
கல்யாண கூப்பாடுகளுக்கு என்று விதிமுறைகள் நிறையவே உள்ளன. சிலர் முறையான கூப்பாடு இல்லாமல் பொருட்கள் விரையம் செய்வதையும் காண முடிகின்றது.நாம் கல்யாணம் என்று கூப்பிட்ட முறைக்கு வீடு வேலை தொழில் போன்றவற்றை விட்டு கல்யாண வீட்டிற்கு சென்றால் சில வீட்டில் வருகின்றவர்களை வாங்க என்று கூப்பிட கூட பந்தலில் ஆள் இருக்காது அப்படியே இருந்தாலும் சிலர் வாங்க என்று கூப்பிடகூட மாட்டார்கள் இதெல்லாம் வேதனைக்குரிய விஷயம் .கூப்பாட்டிற்கு முதலில் சொந்தபந்தங்களையும் அக்கம் பகத்தாரையும் பட்டியல் தயார்செய்து அவர்கள் வீட்டில் போய் கல்யாண வீட்டின் கணவனும் மனைவியுமாக சேர்ந்து கூப்பிட்டால் ஆண்களை கூப்பிட்டவர்கள் பெண்களை கூப்பிட வில்லை என்ற குறைகள் அநேகம் தவிர்க்கப்படும்.முஹல்லா பள்ளியில் தொழவருபவர்களை பட்டியல் எடுத்து முறையாக கூப்பிடவேண்டும் . 4 அல்லது 5 திருமணங்களை ஒன்றுகூடி ஏற்பாடு செய்து ஒரே முஹல்லா பள்ளியில் நடத்தினால் நன்றாக இருக்கும் மேலும் பொருட்செலவும் குறையும் சாப்பாடுகளை வீண்விரயம் செய்யாமல் அதேபோல் விருந்திற்கு வரும் விருந்தாளிக்கு சாப்பாடு பற்ற குறை ஏற்படாதவண்ணம் முதலில் எடுப்பு சாப்பாடுகளை அனுப்புவதை தவிர்த்தல் நலம் .
ReplyDeleteநமதூர் கல்யாண வைபவங்களுக்கு பிறகு சம்மந்த சச்சரவுகளினால் புதிய உறவுகள் சேரும் அதேநேரம் பழைய உறவுகள் பிரியும் .மேலும் ஊரில் அநேகம் பேர்கள் கல்யாணம் முடித்த சொந்தக்காரர்களை மட்டும் தான் சொந்தம் என்று நினைகின்றனர் அது தவறு ஒரு பாரம்பரிய குடும்பத்தில் பிறந்த ஒருவன் குறைந்தது அவனது நான்கு தலைமுறைகளை தெரிந்து வைத்திருக்கவேண்டும் இதையே இஸ்லாமும் வலியுரித்துகிறது அதன்மூலமே தான தர்மம் உதவி போன்றவரை நாம் இஸ்லாம் கூறிய வழிமுறையில் அவர்களுக்கு பகிர்ந்தளிக்கமுடியும் .ஒரு குடும்பத்தில் பெண்பிள்ளைகள் அதிகம் இருந்தால் அவர்களை குடும்பத்தில் வசதி படைத்தோர் கண்டுகொள்வதில்லை .பிறகு அடுத்த தலைமுறையினர் அந்த குடும்ப சொந்த வம்சத்தினரையே மறந்து விடும் அவலமும் ஏற்படுகின்றது . இதுபோன்ற மார்க்கத்திற்கு புறம்பான செயல்களை தவிர்த்து திருமண வைபவங்களும் வாழ்க்கைமுறையும் அமைந்தால் நலமே .
பந்தல் காள் நட ஒரு அழைப்பு , பந்தலை அலங்கரித்தல், 5 கறி உணவை மக்கள் உண்டுகளிக்க, செவிக்கு இஸ்லாமிய கீதம், மணமகன் ஆவணத்து குதிரையில் அமர்ந்து வர, முன்பாக பொய்கள் குதிரை ஆட்டம், நகரை சுற்றி வர மின்விளக்கு , மணமகன் தன் நெருங்கிய சொந்த வீட்டுக்குள் சென்று முடியாதவர்களை பார்த்த கையோடு பால் அருந்தி இறுதியில் நிக்காஹ் நடை பெரும்.
ReplyDeleteஉங்கள் பசுமையான நினைவுகளில் மேல சொன்னத்தை விட்டுடீங்களே! - நன்றி
அன்புள்ள சகோதரர்களே.
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
இந்த பதிவுலே சொன்னது எல்லாம் அப்படித்தான் நடக்குது. பெரியவங்க யாரும் வந்து தலையிட்டா உங்க வேலையை போய் பாருங்க என்று சொல்லும் காலமாக இருக்குது, இந்த தலைமுறையினரில் 90% பேருக்கு மார்க்கம் என்றால் என்ன, மரியாதை என்றால் என்ன எதுவுமே தெரியாது, இதுக்கு காரணம் பெரியவங்க. பல கல்யாணங்களில் அனாச்சாரமும் கூடவே நடக்கின்றதே, அது பற்றி இஸ்லாமிய எந்த இயக்கமும் கண்டன குரல் கொடுக்காதது ஏன்? இயக்கங்கள் எதுக்கும் பயப்படாமல் இயங்க வேண்டும்.
வஸ்ஸலாம்.
ஹுமைராஹ் சுல்தானாஹ்.
முன் பேல்லாம் குடும்பத்தினர் பார்த்த பெண்னையே அல்லது பையனையே பெற்றோர்கள் திருமணம் முடித்து வைப்பார்கள் காலப்போக்கில் பையன் பார்த்த பெண்ணையே அல்லது மகள் பார்த்த பையனையே பெற்றோர்கள் திருமணம் முடித்து வைத்தார்கள் இதையும் தாண்டி ஒரு சிலர் தானாகவே முடிவு செய்து திருமணமும் செய்துக்கொள்கிறார்கள் திருமணத்திற்கு தேர்ந்தெடுக்கம் முறையே மாறுப்போது மற்றவைகளிலும் மாற்றங்கள் இருக்கதானே செய்யும்
ReplyDeleteசரியான தகவல் இது. இன்னும் நிறைய அட்வைஸ் செய்தியும் இருக்கு ஆனால் இதனை நாம் சொல்லி தான் தெரிஞ்சிகே வேணுமா ?
ReplyDeleteசரியான தகவல் இது. இன்னும் நிறைய அட்வைஸ் செய்தியும் இருக்கு ஆனால் இதனை நாம் சொல்லி தான் தெரிஞ்சிகே வேணுமா ?
ReplyDelete