.

Pages

Sunday, May 4, 2014

அதிரை தாஜுல் இஸ்லாம் சங்கத்தில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம் !

அதிரை தாஜுல் இஸ்லாம் சங்கம் மற்றும் பட்டுக்கோட்டை திராவிடன் மருத்துவமனை ஆகியோர் இனைந்து நடத்திய காது - மூக்கு - தொண்டை தொடர்பான இலவச மருத்துவ முகாம் இன்று [ 04-05-2014 ] காலை நமதூர் தாஜுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் நடைபெற்றது.

இதில் திராவிடன் மருத்துவமனையின் காது - மூக்கு - தொண்டை சிறப்பு மருத்துவர் பிரின்ஸ் பீட்டர் தாஸ் M.S. [ ENT ] தலைமையில் பங்கேற்ற மருத்துவ குழுவினர் பரிசோதனையும், ஆலோசனையும் வழங்கினார்கள். மேலும் இம்முகாமில் பங்கேற்று ஆலோசனை பெற்றவர்களுக்கு மருந்துகளும் இலவசமாக வழங்கப்பட்டது.

முன்னதாக தாஜுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் MMS சேக் நசுருதீன், PMK தாஜுதீன், ஜபருல்லா, அப்துல் ரெஜாக், நஜ்முதீன் ஆகியோர் முகாமை துவக்கி வைத்தார்கள். காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்ற இந்த முகாமில் அதிரை மற்றும் அதிரையை சுற்றி வசிக்கக்கூடிய ஏராளமான பொதுமக்கள் முகாமில் கலந்துகொண்டு பயனடைந்தனர்.





1 comment:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்..

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED.
    Consumer & Human Rights
    Thanjoor District Organizer. Adirampattinam-614701.
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.