.

Pages

Sunday, May 4, 2014

அதிரையில் நுங்கு சீசன் துவங்கியது ! ரூ 10 க்கு, 4 சுளைகள் !!

கோடை காலத்தில் மக்களின் சூட்டைத் தணிக்கும் நுங்கு சீசன் அதிரையில் துவங்கியுள்ளது. அதிரையை சுற்றி காணப்படுகிற மகிழங்கோட்டை, தொக்காளிகாடு, பழஞ்சூர், மளவேனிற்காடு, ராசியங்காடு, மஞ்சவயல் உள்ளிட்ட கிராம பகுதியிலிருந்து நுங்குகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

தற்போது அதிரையில் வெப்பம் வாட்டி வருகிற சூழ்நிலையில் மக்களின் தாகத்தை தீர்ப்பதற்காக அதிரையின் பிராதான பகுதியாக கருதப்படுகிற தக்வா பள்ளி, பேருந்து நிலையம் போன்ற இடங்களில் நுங்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பொதுமக்களும் வாகனத்தில் பயணம் செய்வோரும் இந்த நுங்குகளை வாங்கி சாப்பிடுகின்றனர். ரூ 10 க்கு, 4 சுளைகள் வீதம் விற்கின்றனர். மேலும் நிறைய பேர் வீட்டிற்கு என்று தனியாக நுங்கு சுளைகளை வாங்கியும் செல்கின்றனர். இங்கு கொண்டுவரப்பட்ட நுங்குகள் 1-மணி நேரத்தில் முழுவதுமாக விற்று தீர்ந்துவிடுவதாக நுங்கு வியாபாரி கூறுகின்றனர்.

1 comment:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்..

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED.
    Consumer & Human Rights
    Thanjoor District Organizer. Adirampattinam-614701.
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.