.

Pages

Monday, May 5, 2014

அதிரையில் தண்ணீர் பந்தலை மாநில அமைச்சர் வைத்திலிங்கம் திறந்து வைத்தார் !

தமிழக முதல்வரும் அதிமுக கட்சியின் பொதுச்செயலாளருமாகிய செல்வி ஜெயலலிதா கேட்டுக்கொண்டதற்கிணங்க தமிழகமெங்கும் அதிமுகவினர் கோடை கால தண்ணீர் பந்தல் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று பகல் அதிரை பேருந்து நிலையத்தில் நகர கிளையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சியில் மாநில அமைச்சர் வைத்திலிங்கம் கலந்துகொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்.

இதில் அதிமுக கட்சியின் மாவட்ட, ஒன்றியம், கிளை நிர்வாகிகள், அதிமுகவினர் திரளாக கலந்துகொண்டனர். பொதுமக்களுக்கு நீர்மோர், தர்பூசனி ஆகியன வழங்கப்பட்டது.

புகைப்படங்கள் : அப்துல் ரஹ்மான்

4 comments:

  1. கத்தரி வெயிலில் வாடும் மக்களுக்கு இலவச சுத்தமான தண்ணீர் - மோர் வழங்க கொடா நாட்டிலிருந்து உத்தரவு, சுத்தமான தண்ணியா? ரூபாய் 10 கொடுத்தானே கிடைக்கும்?

    இரண்டு நாளைக்கு இரண்டு பானையில் தண்ணீர் இருக்கும் 3 வது நாளில் அங்கே மாடு தான் நிற்கும், எல்லாம் கண்துடைப்பு,

    ஒட்டு பதிவு நடக்கும் போது மட்டும் பவர் இருந்தது அடுத்த நாள் வழக்கம் போல் பவர் கட் , என்ன மாயமோ போங்க.

    அமைச்சர் முகத்தில் ஒரு கலகலப்பு இல்லையே, தேர்தல் முடிவு பயமோ

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED.
    Consumer & Human Rights
    Thanjoor District Organizer. Adirampattinam-614701.
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  3. மக்களின் தண்ணீர் தாகத்தை தீர்த்துவைத்த அ இ அ தி மு க வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. மக்களின் தண்ணீர் தாகத்தினை தீர்த்து வைத்தது போல் மின்சார,பால்,பஸ் கட்டணம் ஆகியவற்றினை குறைத்து பொதுமக்கள் மக்கள்படும் கஷ்டங்களை தீர்த்து வைப்பீர்களா ? தீர்த்து வைப்பீர்களா ?

      Delete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.