.

Pages

Friday, May 9, 2014

பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் லாரல் மேல்நிலைப்பள்ளி முதலிடம் பெற்று சாதனை !

இன்று வெளியான பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் அதிரை அருகே உள்ள லாரல் பள்ளி மாணவி அனாமிகா 1200க்கு 1177 மதிப்பெண்கள் பெற்று பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அளவில் முதலிடமும், வருவாய் மாவட்ட அளவில் முன்றாம் இடமும் பெற்றுள்ளார்.

இவர் பாடவாரியா பெற்ற மதிப்பெண்கள் விபரம்: 
தமிழில் 190, ஆங்கிலம் 192, இயற்பியல் 200, வேதியியல் 199, உயிரியல் 198, கணிதம் 198 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

இந்த பள்ளியின் மாணவி பவித்ரா 1174 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் இரண்டாம் இடம் பெற்றார்.

பாடவாரியா இவர் பெற்ற மதிப்பெண் விபரம் வருமாறு: 
தமிழில் 183, ஆங்கிலம் 194, இயற்பியல் 200, வேதியியல் 198, உயிரியல் 199, கணிதம் 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

அருண்மொழிராஜன் 1171 மதப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் மூன்றாம் இடம் பெற்றார்.

பாடவாரியாக இவர் பெற்ற மதிப்பெண்கள் விபரம் : 
தமிழில் 182, ஆங்கிலம் 190, இயற்பியல் 200, வேதியியல் 200, உயிரியல் 199, கணிதம் 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

இம்மாணவன் பொறியியல் துறை படிப்பிற்கு கட்ட ஆப் மதிப்பெண்கள் 200-200 பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவர்களில் ஒருவராக உள்ளார்.

மேலும். பள்ளயில் கணிதப்பாடத்தில் 16 பேரும், இயற்பியல் பாடத்தில் 13 பேரும்,வேதியியல் பாடத்தில் 9பேரும், உயிரியியல் பாடத்தில் 8 பேரும் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். படித்து அதிக மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்த மாணவர்களை பள்ளியின் தாளாளர் பாலசுப்ரமணியன், முதல்வர் சந்திரசேகரன், இயக்குனர்கள் பாரத், எலிசபெத் தேவாசிர்வாதம், துணை முதல்வர் வி.பி. சந்திரசேகரன், தலைமையாசிரியர் ஆறுமுகம் ஆகியோர் பாராட்டினர்.

நன்றி : 'நிருபர்' பட்டுக்கோட்டை ராஜா

8 comments:

  1. Seithi veliyudu mun athai satru visiratha pinnar veliyudungal tanjai mavattatil P.R. PUBLIC SCHOOL STUNDENT SRINATH FIRST PLACE MARK 1183. The hindu tamil website parkavum

    ReplyDelete
    Replies
    1. லாரல் பள்ளி பட்டுகோட்டை கல்வி மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளது சரியானதே.

      Delete
  2. வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

    ReplyDelete
  3. தேர்வில் தேர்ச்சியுற்ற மாணவ மாணவியர்களுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள், தொடர்ந்து இப்பள்ளி முதலிடத்தில் உள்ளது. Etrance Exam வைத்து தான் admission கிடைக்குது இதுவே ஒரு காரணம் என சொல்லலாம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.