கடந்த சில வருடங்களாக உள்ளூர் தனியார் ஹஜ் சர்வீஸ் நிறுவனங்கள் ஹஜ் செய்ய விரும்பும் சவூதி வாழ் வெளிநாட்டினர்களிடம் குறிப்பாக இந்தியர்களிடம் அதிக தொகை வசூல் செய்து கொள்ளை லாபம் சம்பாதித்தன. மேலும் சிலர் பணத்தைப் பெற்றுக் கொண்டு கம்பி நீட்டிய சம்பவங்களும் உண்டு. இதுகுறித்து பலர் அரசு அதிகாரிகளுக்கு புகார் அளித்திருந்தனர்.
இதனைக் கருத்தில் கொண்டு இவ்வருடம் முதல் ஹஜ் செய்ய விரும்பும் உள்ளூர் வாழ் வெளிநாட்டினர் ஆன்லைன் மூலம் நேரடியாக விண்ணப்பிக்கும் வசதியை சவூதி அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்மூலம் கூடுதல் பணம் பெற்று பலருக்கு சிரமம் கொடுத்த உள்ளூர் தனியார் ஹஜ் சர்வீஸ் நிறுவனங்களின் மோசடிகளுக்கு சவூதி அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
அதன்படி இவ்வருடம் ஹஜ் செல்ல விரும்பும் சவூதி வாழ் வெளிநாட்டினர் haj.gov.sa.என்ற இணையதளத்தில் நேரடியாகச் சென்று விண்ணப்பிக்கலாம். இத்தளத்தில் உள்ள படிவத்தில் கூறப்பட்டுள்ளதை சரியாகப் படித்துப் பார்த்து ஓவ்வொரு படியாக விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். இது இன்று (திங்கள்கிழமை) முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.
சவூதி அரசின் இந்த அறிவிப்பின் மூலம் பல வெளிநாட்டினர், குறிப்பாக இந்தியர்கள் மகிழ்ச்சிஅடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.