.

Pages

Friday, September 5, 2014

மேலத்தெருவின் பிரதான சாலையில் மின் கம்பி அறுந்து விழுந்தது ! பெரும் விபத்து தவிர்ப்பு !!

அதிரையில் இன்று இரவு திடீர் கன மழை பெய்தது. காற்றும் பலமாக வீசியது. இதில் மேலத்தெருவின் பிரதான பகுதியில் காணப்படும் மின்கம்பிகள் அறுந்து கீழே விழுந்தது. தகவலறிந்த அப்பகுதி இளைஞர்கள் அதிரை மின்சார வாரியத்திற்கு தொடர்பு கொண்டு தெரியப்படுத்தினர். பொதுமக்களை அப்பகுதி வழியே செல்லாமல் கவனமாக பார்த்துகொண்டனர். இதையடுத்து விரைந்து வந்த மின்சார வாரிய அலுவலர்கள் - ஊழியர்கள் அறுந்து கீழே கிடந்த மின் கம்பியை சரி செய்தனர். மின்கம்பியை சரி செய்யும் வரை இந்த பகுதியில் மின்சார இணைப்பு துண்டிப்பு செய்யப்பட்டிருந்தது.  சரியான நேரத்தில் துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால் நிகழ இருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 

செய்தி மற்றும் படங்கள் :
நூர் முஹம்மது ( நூவன்னா )







2 comments:

  1. இதற்கு முன்னரும் அதிரை பகுதியில் இது போன்ற விபத்துகள் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் என்ன தரமற்ற கம்பிகளா, அல்லது மின்சார வாரியத்தின் அலட்சியமா? நல்லவேளை உயிர் இழப்பிலிருந்து அல்லாஹ் காப்பாற்றினான். தக்க நேரத்தில் கண்டுபிடித்து தகவல் கொடுத்து பெரும் ஆபத்திலிருந்து தற்காத்த இளைஞர்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. எனக்கு தகவல் தந்த நண்பர் முத்தலிப் அவர்களுக்கும் உடனே நடவடிக்கை எடுத்த சகோ KMA மற்றும் கோபால் அவர்களுக்கும் நன்றி......
    \
    அன்புடன.
    மான்.A.ஷேக்
    Human Rights.
    Thanjavur District. Adirampattinam-614701.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.