.

Pages

Wednesday, September 3, 2014

விநாயகர் ஊர்வலம் : முத்துப்பேட்டையின் தற்போதைய நிலவரம் !

முத்துப்பேட்டையில் இன்று மாலை விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற இருக்கிறது. இதையொட்டி அப்பகுதியில் பலத்த போலீசார்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஊர்வலம் ஜாம்பவான் ஓடை பகுதியிலிருந்து புறப்பட்டு முத்துப்பேட்டை தர்கா, ஆசாத்நகர், பழைய பஸ் நிலையம், பெரியகடைவீதி வழியாக செல்கிறது. பின்னர் கீழக்காடு அருகே உள்ள பாமணி ஆற்றில் சிலைகள் கரைக்கப்படுகிறது.

விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய மண்டல ஐ.ஜி. ராமசுப்பிரமணி, டி.ஐ.ஜி. சஞ்சீவ்குமார், திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு காளிராஜ், மகேஷ்குமார், தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜ், 4 கூடுதல் போலீஸ் சூப்பிரண் டுகள், 27 டி.எஸ்.பி.கள், 52 இன்ஸ்பெக்டர்கள், 167 சப்–இன்ஸ்பெக்டர்கள், 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

மேலும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை மற்றும் ஆயுதப்படை போலீசார் 1000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். ஊர்வலத்தை கண்காணிக்க 4 இடங்களில் கண்காணிப்பு காமிரா, 4 இடங்களில் சோதனைசாவடி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளுக்கும், வர்த்தக நிறுவனங்களுக்கும், டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. கலவரம் வெடித்து முடிந்து விட்டது இதுவரை உங்களிடமிருந்து தகவலைக் காணோம் ?,

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.