.

Pages

Thursday, September 11, 2014

பழுதடைந்த வாகனங்களால் அதிரையில் குப்பைகள் அள்ளுவதில் சிரமம் - ஊழியர்கள் அவதி !! குப்பைகள் குமியும் அபாயம் !!!

அதிரை பேரூராட்சிக்கு சொந்தமான 2 டிராக்டர்களும், 1 அபேய் வாகனமும் உள்ளது. இவற்றை கொண்டு அதிரை பகுதிகளில் தினமும் குமியும் குப்பைகளை அள்ளிச்சென்று ஊருக்கு அப்பால் கொட்டப்படுகிறது. இதில் அபேய் வாகனத்தில் ஏற்பட்ட திடீர் பழுதால் பழுதை சரிசெய்வதற்காக தற்போது வொர்க்ஸ்சாப்பில் சில நாட்களாக கிடக்கிறது. 

மீதமுள்ள 2 வாகனங்களை கொண்டு குப்பைகள் அள்ளப்பட்டு வந்தது. பரந்துவிரிந்த பகுதியான அதிரைக்கு இந்த வாகனங்கள் போதாது என்றும், வாகனங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கூறி வந்தாலும், இருக்கிற வாகனங்களை கொண்டு நகரில் குமியும் குப்பைகளை ஊழியர்கள் தினமும் அள்ளி வந்தனர். மேலும் பணி நேரங்களை பிரித்து கொண்டு இரவு நேரங்களிலும் பணி செய்து வந்தனர்.

இந்நிலையில் இன்று காலை வண்டிப்பேட்டை அருகே பேரூராட்சியின் மற்றொரு வாகனத்தில் ஏற்பட்ட திடீர் பழுதால் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. பழுதடைந்த வாகனத்தின் டயர்கள், இணைப்பு பெட்டி உள்ளிட்ட முக்கிய பகுதிகள் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இவற்றை ஊழியர்கள் கையாள்வதில் சிரமம் ஏற்படுவதை அறியமுடிகிறது.

தற்போது 2 வாகனங்களும் பழுதடைந்து காணப்படுவதால் மீதமுள்ள ஒரு வாகனத்தை கொண்டு குப்பைகள் அள்ளுவதில் சிரமம் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. ஏற்கனவே தெருக்களில் ஆங்காங்கே குப்பை கூளங்கள் குமிந்து காணப்பட்டு வந்ததால், சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கருதி பொதுமக்களிடமிருந்து புகார்கள் சென்றது. இதையடுத்து அதிரடியாக களத்தில் இறங்கிய அதிரை பேரூராட்சி நிர்வாகம் ஊழியர்களின் உதவியோடு ஆங்காங்கே குமிந்து காணப்படும் குப்பை கூளங்களை அப்புறப்படுத்தி வந்தது.

இந்நிலையில் மீண்டும் வாகன பழுதால் நகரில் குப்பைகள் தேங்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. அதிரை பேரூராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கையாக குப்பைகளை அள்ளுவதற்காக புதிதாக வாகனங்களை கொள்முதல் செய்து பயன்படுத்த வேண்டும் என்பது பெரும்பாலான மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. மேலும் பொதுமக்களின் உயிருக்கு உலை வைக்கும் இது போன்ற பழைய வாகனங்களை அதிரை பகுதிகளில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்பதும் முக்கிய வேண்டுகோளாக இருக்கிறது.




1 comment:

  1. பதிவுக்கு நன்றி.‎
    தவலுக்கும் நன்றி.‎

    அடேங்கப்பா, இந்தே பெரிய ஊருக்கு குப்பை கழிவுகளை சுமக்க ரெண்டு ‎வண்டிதானா? கேட்கவே வெட்கமாக இருக்குதே, ஒரு வீட்டுக்கு ஜாலியாக ‎சுத்த நாலு வண்டி இருக்கும் போது, ஒரு வார்டுக்கு குப்பை கழிவுகளை ‎சுமக்க ஒரு வண்டியாவது இருக்க வேண்டாமா?‎

    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.‎
    Thanjavur District Organizer. Adirampattinam-614701.‎
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.