.

Pages

Friday, September 12, 2014

தொடர் சாதனையில் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி !

பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு குறு வட்டங்களுக்கு இடையிலான கால்பந்தாட்ட போட்டி அதிரை காதிர் முகைதீன் கல்லூரி மைதானத்தில் இன்று துவங்கியது. இதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த கால்பந்தாட்ட வீரர்கள் பங்கேற்று விளையாடினர்.

இதில் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் 6 முதல் 8 ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பங்கேற்ற ஜூனியர் பிரிவிலும், 9 முதல் 10 ம்  வகுப்பு வரையிலான மாணவர்கள் பங்கேற்ற சீனியர் பிரிவிலும், 11 முதல் 12 ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பங்கேற்ற சூப்பர் சீனியர் பிரிவிலும் ஆடியது. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அனைத்து பிரிவிலும் சாம்பியன் பட்டத்தை வென்றது. பள்ளி வரலாற்றில் பல ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதையடுத்து பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மஹபூப் அலி தலைமை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட பள்ளியின் முன்னாள் சாதனையாளரும், 1952 ம் ஆண்டில் மதராஸ் மஹான மாநில போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று வெற்றி வாகை சூடியவருமாகிய ஹாஜி அபுல் கலாம், கல்வியாளர் 'நாவலர்' நூர் முஹம்மது, பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் முஹம்மது தமீம், பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோர் கால்பந்தாட்ட வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி கெளரவித்தார்கள்.

சாதனை நிகழ்த்திய கால்பந்தாட்ட வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக அதிரை ப்ரெண்ட்ஸ் ஃபுட் பால் அசோசியேஷன் [ AFFA ] சார்பில் ரன்னர் மற்றும் வின்னர் அணிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஊர் பிரமுகர்கள், AFFA நிர்வாகிகள், விளையாட்டு ஆர்வலர்கள், பள்ளி மாணவர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். 

சமீப காலமாக பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் விளையாட்டு போட்டிகளில் பள்ளியின் சார்பில் பங்கேற்று சாம்பியன் பட்டத்தை வென்று தொடர் சாதனைகளை நிகழ்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.

செய்தி மற்றும் படங்கள் : நூவன்னா















3 comments:

  1. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.‎

    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.‎
    Thanjavur District Organizer. Adirampattinam-614701.‎
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  2. மேன்மேலும் உயர்வு பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. தொடர் வெற்றிக்கு தொடர் வாழ்த்துக்கள்.

    அப்துல் கலாம் காக்கா அவர்களை அழைத்து கவுரப்படுத்தியது ஒரு நல்ல பாராட்டத்தக்க அணுகுமுறை.

    ஆசிரியர் தினத்தன்றே அவர்களை கவுரவபப்டுத்த நினைத்தோம். அன்று இயலாததை அவர்கள் தொடர்புடைய விளையாட்டுப் போட்டியின் வெற்றிவிழாவில் செய்தது நிறைவானதாக இருக்கிறது. நல்ல பாராட்டத்தக்க நிர்வாக முடிவு.

    அவர்கள் ஒரு ரிகார்டு பிரேக்கர் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

    மிகுந்த பாராட்டுக்கள்.

    இதே போல் கல்வித் தேர்வுகளிலும் இந்த மாணவர்கள் வெற்றி பெற்று அந்த வெற்றியைக் கொண்டாட வாழ்த்துகிறேன்.

    நிறைவாக என் மனதில் தோன்றியது ஒரு பாடல் வரி . அது

    " கண்ணுபடப் போகுதய்யா சின்னக் கவுண்டரே!"

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.