.

Pages

Thursday, September 4, 2014

விளையாட்டுப்போட்டிகளில் சரித்திரம் படைத்த காதிர் முகைதீன் மேல் நிலைப் பள்ளி [படங்கள் இணைப்பு]

பட்டுக்கோட்டை கல்விமாவட்ட அளவிலான குறுவட்ட குழுவிளையாட்டு  போட்டிகள்  கரம்பயம்  அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் (02.09.2014,  03.09.2014) செவ்வாய்,புதன் ஆகிய இருதினங்கள் நடைபெற்றது.

பல்வேறு பள்ளிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கால்பந்து  போட்டியில் ஜுனியர் பிரிவு, சீனியர் பிரிவு, சூப்பர் சீனியர் பிரிவில் வெற்றி பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை  வென்றனர்.

இப்பள்ளி வரலாற்றில் முதல் முறையாக மூன்று பிரிவிலும் மாணவர்கள் சாம்பியன் பட்டம் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்பள்ளி மாணவர்கள் குறுவட்ட தடகளப் போட்டியில் 65 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர் இதில் பி.முத்துராசு (ஜுனியர்), எம் முகம்மது ஆசிப் சூப்பர் சீனியர் தனிநபர் சாம்பியன் பட்டம்  வென்றனர் வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர்களையும், பள்ளி நிர்வாகம், தலைமையாசிரியர்,  உதவி தலைமமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்,  அலுவலக  பணியாளர்கள் பாராட்டினார்கள்.



5 comments:

  1. பழமான வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    உங்கள் வெற்றிக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். முயற்ச்சியில் ‎விளையாட்டாக இருந்து விடக் கூடாது. ‎
    ‎ ‎
    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.‎
    Thanjavur District Organizer. Adirampattinam-614701.‎
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்.

    தேர்வுகளிலும் முதல்நிலை பெற ஆசை.

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள்.

    தேர்வுகளிலும் முதல்நிலை பெற ஆசை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.