கவிதைச்செம்மல், தமிழ்மாமணி போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார். பல நூல்களுக்கு அணிந்துரையும் வழங்கியுள்ளார். இவரின் நூல்கள் பலருக்கு முனைவர் பட்டம் பெற உதவியாக இருந்துள்ளது.
சமீபத்தில் நாகர்கோயிலில் கலை இலக்கிய மேம்பாட்டு உலகப்பேரவையின் சார்பில் சிறந்த எழுத்தாளர்கள் - சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னை நீதிபதி மு. புகழேந்தி முன்னிலையில், நாஞ்சில் சம்பத் அவர்களால் விருதுகள், பொற்கிழிகள் வழங்கப்பட்டது. இதில் அதிரையை சேர்ந்த கவிஞர் மு. முஹம்மது தாஹா அவர்களுக்கு 'ஆதாம் - ஹவ்வா காவியம்' என்ற இலக்கியப் படைப்புக்காக 'முரசொலிமாறான் விருது' மற்றும் பொற்கிழி ரூபாய் 5000/-ம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
இலக்கிய பிரிவில் மொத்தம் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டதில் முதல் பரிசு கவிஞர் மு. முஹம்மது தாஹா அவர்களுக்கு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. விழா ஏற்பாடுகளை கலை இலக்கிய மேம்பாட்டு உலகப்பேரவையின் பொதுச்செயலாளர் தெ.வே. பகவதி பெறுமாள் சிறப்பாக செய்து இருந்தார்.



Congratulation
ReplyDeleteமாஷா அல்லாஹ்.. வல்ல இறைவன் தாங்களுக்கு பூரண குணத்தையும் ஆயுளையும் கொடுத்து மேலும் சமுதாய தொண்டாற்ற என் துஆக்காள் மாமா
ReplyDeleteAAMEEN...
Deleteபாமரனும் போற்றும் வகையில் கவிதைகள் படைத்த கவிஞர் மு. முஹம்மது தாஹா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteதாஹா சார் அவர்கள் நமதூரைப் பொறுத்த வரை ஒரு குடத்திலிட்ட விளக்கு.
ReplyDeleteஅவரது சாதனைகள் நமது ஊராரால் போதுமான அளவுக்கு உணரப்படவில்லை. அல்லது உணர்த்தப் படவில்லை.
தாஹா சார் அவர்களின் அனைத்து நூல்களையும் படித்துக் கொண்டிருக்கிறேன் . இன்ஷா அல்லாஹ் அவைகளைப்பற்றிய ஒரு தொகுப்பு ஆய்வுக் கட்டுரை வெளியிட எண்ணம். அத்துடன் பல தமிழ் அறிஞர்கள் தாஹா சார் அவர்களைப் பாராட்டி ஆய்வுக் கட்டுரைகளை அளித்து இருக்கிறார்கள்.
அறிஞர்கள் நெஞ்சில் அதிரை தாஹா என்ற தலைப்பில் அவர்களைப்பற்றி வந்துள்ள நூலைத் தொகுத்து ஒரு கட்டுரை எழுதவும் எண்ணம். இன்ஷா அல்லாஹ்.
இக்கரைக்கு அக்கரைப் பச்சை. இது பழமொழி. இதேர்கேற்ப திறமைகள் பிறந்த ஊரில் மதிக்கப்படுவதில்லை.
ReplyDeleteஇதனையே கண்ணியத்திற்குரிய எழுத்தாளர் இப்ராஹீம் அன்சாரி அவர்கள் "தாஹா சார் அவர்கள் நமதூரைப் பொறுத்த வரை ஒரு குடத்திலிட்ட விளக்கு" என்று சுருங்கச் சொல்லி விளக்கின் வெளிச்சம் வெளிப்பட அவர்களைப் பற்றி தொகுப்பு ஆய்வுக்கட்டுரை எழுத எண்ணம், என எழுதியிருப்பது மகிழ்வே !
அதிரை அருட்கவி அவர்கள் முப்பது வருடங்களுக்கு மேலாக பெண்களுக்காக வாரம்தோறும் தொடர்ந்து மார்க்க விளக்கச் சொற்பொழிவு ஆற்றி வருகிறார்கள். இது ஒரு மாபெரும் தியாகம். இதற்காகப் பிரதிபலன் பாராது நேரம் செலவு செய்துவருகிறார்கள். இத்தியாகத்தை நாம் என்னவென்று சொல்வது !
ஆன்மிக மார்க்கச் சொற்பொழிவு, அதல் சிந்தனை, அதில் ஆய்வு செய்துவரும் இவர்களைப் பார்க்க நேரும்பொழுது நம் மனதில் மரியாதை கலந்த உணர்வு ஏற்படுவதை உணரலாம்.
நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பதுப் போல் அருகாமையில் வாழும்போது முக்கியங்கள் தெரிவதில்லை ! இது மனித சுபாவமோ !
Masha Allah. ..
ReplyDelete