.

Pages

Friday, September 5, 2014

ஜொலிக்க இருக்கும் செக்கடி குளம் ! [ படங்கள் இணைப்பு ]

அதிரையின் பொக்கிஷங்களில் ஒன்றாக திகழும் செக்கடி பள்ளிவாசலோடு இணைந்து காணப்படும் செக்கடி குளத்தை நவீன படுத்தும் முயற்சியில் அப்பகுதியை சேர்ந்த பிரமுகர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக கடந்த சில நாட்களாக ஜேசிபி இயந்திரத்தின் உதவியோடு குளத்தை சுற்றி காணப்படும் மேடுகளை அகலப்படுத்தி பாதுகாப்பான முறையில் நடை மேடை அமைக்கவும், நடை மேடையின் இருபுறமும் செடிகள், மரங்கள் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட இருக்கிறது. இதனால் இந்த பகுதியின் தோற்றம் புதுப்பொலிவுடன் காட்சியளிப்பதோடு மட்டுமல்லாமல் பாதுகாப்பான நடை பயிற்சியையும் மேற்கொள்ள முடியும் என்பது அப்பகுதியினரின் கருத்தாக இருக்கிறது.

விரைவில் புதுப்பொலிவுடன் ஜொலிக்க இருக்கும் செக்கடி குளத்தின் அழகிய புகைப்படங்கள் இதோ...





15 comments:

  1. செக்கடி குளத்தைச் சுற்றிலும் பெண்கள் நடைப்பயிற்சி செய்ய வசதியாக நடைமேடை அமைக்கும் திட்டம் MST குரூப் சகோதரர்களின் நெடுநாள் திட்டம். இதை விரைந்து செயல்படுத்த பல்வகையிலும் உதவும் மரியாதைக்குரிய MST தாஜூதீன் காக்காவுக்கு அல்லாஹ் நீண்ட ஆரோக்கியத்தைக் கொடுப்பானாக. ஆமின்.

    ReplyDelete
  2. நமதூரின் குளங்கள் தூர்வாரி சுத்தம் செய்யபடுவது வரவேற்கும் செயல் இருப்பினும் அவற்றை சுற்றி ஆழ்குழாய் கிணறுகள் அதிகம் இருப்பதால் நிரம்பிய குளங்களில் கூட அதிகபட்சம் மூன்று மதங்களுக்கு
    மேல் அதன் நீர்நிலை வற்றி விடுகின்றன என்பதும் நிதர்சன உண்மை .

    மேலும் அதிரைக்காரன் சொல்வதுபோல் பெண்களுக்கு Walking Pathways அமைய பெற்றால் நலம்.குளத்தோரம் சருக்கல் வரும் பட்சத்தில் அதற்கு முறையான Fencing அவசியம் .

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    செக்கடிக் குளத்தின் இந்த அழகுக் கோலத்தை சிந்தனையுடன் நினைத்துப் ‎பார்க்கையில், நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது, திருமதி. மேகலா ‎டீச்சர் சிந்து சமவெளி நாகரீகமாகிய “மொஹெஞ்சதாரோ-ஹரப்பா” ‎இவைகளை குறித்து பாடம் நடத்தினதையும் அவைகளை பாட ‎புஸ்தகத்தில் புகைப்பட உருவில் கண்டதையும் இப்போது என் மனதில் ‎நிழலாடுகிறது.‎

    ஹரப்பா என்பது சிந்து வெளி பகுதியில் அமைந்துருந்த பண்டைய ‎நகரங்களில் ஒன்று, இன்றைய பாகிஸ்தானின் வடகிழக்கு பகுதியில் ‎பஞ்சாப் மாகாணத்தில் சகிவாலுக்கு 35 கிலோ மீட்டர் தொலைவில் இதன் ‎அழிபாடுகள் உள்ளன. இது கிமு 3300-1600.‎

    மோஹெஞ்சதாரோ என்பது சிந்து வெளிப் பண்பாட்டுப் பகுதியில் ‎அமைந்திருந்த முக்கிய நகரங்களுள் ஒன்று. ஏறத்தாழ கிமு. 26-ஆம் ‎நூற்றாண்டளவில் உருவாகியிருக்கக்கூடும் எனக் கருதப்படுகின்ற இது ‎இன்றைய பாகிஸ்தான் சிந்துப் பகுதியில் உள்ள சுக்கூர் என்ற ஊருக்கு ‎தென்மேற்கே 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ‎
    ‎ ‎
    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.‎
    Thanjavur District Organizer. Adirampattinam-614701.‎
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
    Replies
    1. // நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது, திருமதி. மேகலா ‎டீச்சர் சிந்து சமவெளி நாகரீகமாகிய “மொஹெஞ்சதாரோ-ஹரப்பா” ‎இவைகளை குறித்து பாடம் நடத்தினதையும் //

      யான் ஜமாலாக்கா நீங்க மேகலா டீச்சர் ஸ்டுடண்டா !?

      எனக்கும் அவுங்கதான் டீச்சர்

      Delete
    2. அவுங்களா இருக்காது, அவுங்க மகளா இருக்கும். நான்றா நினைத்து பார்த்து சொல்லுங்க.

      Delete
  4. எல்லாம் சரிதான் பழைய செக்கடிக் குளம்போல தண்ணீர் நிரம்பிக் காட்சியளிக்கப்போவது எப்போது.!?!?

    ReplyDelete
  5. இது மாதிரி யோசிக்கும் அன்பு உள்ளங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் அதே மாதிரி நடு குளத்தில் ஒரு அருமையான திருமண மஹால் ஓன்று கட்டி அந்த வருமானத்தை செக்கடி பள்ளிக்கு வர்றமாதிரி செஞ்சா அருமையா இருக்கும்.........

    ReplyDelete
  6. வரவேற்கத்தக்க முயற்சிகள்.

    Bro. அபூபக்கர் அவர்கள் சொல்வது போல் குளத்தைச் சுற்றி பாதுகாப்பான வேலி அமைப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

    இந்த ஏற்பாட்டால் செக்கடிக் குளத்தின் ஆழம் அதிகமாக ஆகலாம். ஆகவே குழந்தைகளை நடை பயிற்சியின் போது கவனமாக கவனித்துக் கொள்ள வேண்டும்.

    செக்கடிக் குளத்தின் பரப்பளவைக் குறைத்துவிடாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    செக்கடிக் குளத்தின் தென்புறம் நிறைய ஆக்கிரமிப்புகள் இருக்கின்றன. அவைகளைப் பற்றியும் ஒரு முறைப்படுத்தி வணிகவளாகமாகக் கட்டி பள்ளியின் வருமானத்துக்கு வழிவகுக்கலாம்.

    இந்த இடத்தில் சிறுவர்கள் ஒரு பூங்கா வைத்து இருந்தார்களே அதன் எதிர்காலம் என்ன?

    பள்ளியோடு ஒட்டிய மூலையில் நூல் நிலையம் வைக்கலாம் என்பதையும் பரிசீலிக்க வேண்டும்.

    தம்பி ஜமாலுதீன் அவர்கள் சொல்லி இருப்பது போல் எம் எஸ் டி அவர்களைப் பாராட்டுவதை வழி மொழிகிறேன்.

    ReplyDelete
  7. செக்கடி குளத்தைச் சுற்றிலும் பெண்கள் நடைப்பயிற்சி செய்ய வசதியாக நடைமேடை அமைக்கும் திட்டம் MST குரூப் சகோதரர்களின் நெடுநாள் திட்டம். இதை விரைந்து செயல்படுத்த பல்வகையிலும் உதவும் மரியாதைக்குரிய MST தாஜூதீன் காக்காவுக்கு அல்லாஹ் நீண்ட ஆரோக்கியத்தைக் கொடுப்பானாக. ஆமின்.



    அன்புடன.
    மான்.A.ஷேக்
    Human Rights.
    Thanjavur District. Adirampattinam-614701.

    ReplyDelete
  8. அப்பகுதி இளைஞர்களின் கனவுத்திட்டத்தை நினைவாக்கிக்கொண்டிருக்கின்ற சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    கடந்த ஒரு வருட காலமாக முஹைதீன் ஜும்ஆ பள்ளிக்கு அருகில் ஒரு சிறிய பூங்கா ஒன்றை அமைத்து பராமரித்து வந்த இளைஞர்கள் அந்த பூங்காவை குளத்தின் மூன்று பக்கத்திற்கும் விரிவு படுத்த விருப்பப்பட்டு அங்குள்ள பெரியவர்களை அணுகி வந்தனர் என்பதை தற்பொழுது ஞாபக படுத்திக்கொள்ள விரும்புகின்றேன். இதுபோல் ஊரில் உள்ள இளைஞர்களும் செயல்பட்டால் நமதூரின் சுற்றுப்புறச்சூழல் வளம்பெறும்.

    மேலும் இதுபோன்று செயல்படுத்தப்படும் திட்டங்கள் சரியாக பராமரிக்கப்பட அந்தந்த பகுதி மக்கள் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். மேலும் தங்களது சுற்று பகுதியில் ஆங்காங்கு மரங்களை நட்டு மக்கள் களைப்பாற வழிவகுத்தால் அது அவருக்கு சதகத்துல் ஜாரியாவாக மாறிவிடும்.

    குளத்தின் ஓரத்தில் அணைக்கப்படும் மணல் மழைகாலத்தில் அரிப்பு ஏற்படாமல் இருக்க தகுந்த முன்னேற்பாடுகள் செய்தால் நன்றாக இருக்கும். நடைபாதையின் இரு புறமும் கம்பி வேலிகள் அமைத்தால் பாதுகாப்பாக அமையும். அதில் சிறுவர்கள் விளையாடுவதற்கு எதுவாக சாதனங்கள் நிறுவினால் மிக உபயோகமாக அமையும்.

    நடைபயிற்சி மேற்கொள்ளும் நேரத்தில் பெண்களுக்கு இடையூறாக ஆண்கள் செக்கடி மேடு பகுதியில் (அப்பாஸ் ஹாஜியார் படிப்பகம்) அமர்வதை தவிர்க்கவும். இது செயல்படுத்தப்பட்டால் மட்டுமே இத்திட்டத்தின் முழு பயனையும் எதிர்பார்க்க முடியும்.


    வீட்டுக்கொன்றல்ல.. ஆளுக்கொரு மரம் வளர்ப்போம் - மண் வளம் காப்போம் - மழை பெறுவோம், இறைவன் நாடினால்...

    ReplyDelete
  9. செக்கடி குளத்தை தூர்வாரி நடைமேடை அமைப்பது நல்லவிஷயம் தான்அதைவிட பாதுகாப்பு வேலி அவசியம்.....

    ReplyDelete
  10. // நடைபயிற்சி மேற்கொள்ளும் நேரத்தில் பெண்களுக்கு இடையூறாக ஆண்கள் செக்கடி மேடு பகுதியில் (அப்பாஸ் ஹாஜியார் படிப்பகம்) அமர்வதை தவிர்க்கவும். இது செயல்படுத்தப்பட்டால் மட்டுமே இத்திட்டத்தின் முழு பயனையும் எதிர்பார்க்க முடியும்.//

    சகோ.தவ்ஃபீக்கின் கருத்தை வழிமொழிகிறேன்.

    மேலும், நடைப்பயிற்சி முடிந்து தினமும் பயன்படுத்திய கலோரி அளவை சரிபார்க்கவும், ஊட்டச் சத்து பரிந்துரை மற்றும் தொடர்புடைய மருத்துவ ஆலோசனைகள் வழங்க ஷிஃபா மருத்துவமனையின் சார்பிலோ அல்லது புதிதாகவோ பெண்களுக்கான மையம் ஒன்று செக்கடிமேடு பகுதியில் நிறுவலாம்.

    அஸருக்குப் பிறகு ஆண்களுக்கு நடைமேடையை ஒதுக்கலாம்.

    பேரூந்துகளை கருச்சமணி குளம் அருகே புதிய நிறுத்தம் ஏற்படுத்தினால், இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைந்து பெண்கள் சுமூகமாக புழங்க முடியும்.

    இவற்றையும் பரிசீலித்து நீண்ட கால திட்டங்களுடன் செயல்படுத்தி மஹ்ரம் விசயத்தில் பெண்களுக்கான பாதுகாப்பையும் உறுதி செய்தல் அவசியம்.

    ReplyDelete
  11. ஜமால் காக்கா, திருமதி.மேகலா டீச்சர் எங்களுக்கு அறிவியல் ஆசிரியை. அனேகமாக, உங்கள் வரலாறு ஆசிரியை வேறொருவராக இருந்திருக்கும். (இருந்தாலும் சந்தடி சாக்கில் நீங்கள் வயதைக் குறைக்க முயல்கிறீர்கள் ;))

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.