ஜித்தா, மார்ச் 1,
சவுதி அரேபியாவில் வாழும் இந்திய மக்களுக்கு பல்வேறு தன்னார்வ பணிகளை இந்தியன் சோசியல் ஃபோரம் செய்துவருகின்றது. பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு உதவுவது, இரத்த தானம் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்துவது என் பல்வேறு நலத்திட்டங்களை செய்துவருகின்றது.
கடந்த 24.02.2017 வெள்ளிக்கிழமையன்று இந்தியன் சோசியல் ஃபோரம் ஜித்தா தமிழ்ப்பிரிவின் சார்பாக மாபெரும் அரசியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி சவுதி அரேபியா, ஜித்தா மாநாகரில் ஷரபிய்யா இம்பாலா கார்டன் திறந்தவெளி அரங்கில்; ‘தேசத்தின் வளர்ச்சியில் நமது பங்களிப்பு’ என்ற தலைப்பில் சோசியல் ஃபோரம் ஜித்தா மாகாண தமிழ்பிரிவு தலைவர் சகோதரர் அல் அமான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சி சரியாக மாலை 7:30 மணியளவில் இளவல் சிபகத்துல்லாஹ் திருமறை வசனங்களை ஓதி துவக்கி வைத்தார். ஜித்தா மாகண சோசியல் ஃபோரம் பொதுச் செயலாளர் சகோதர் நாஞ்சில் நாசர்கான் அவர்கள் வந்திருந்தோர் அனைவரையும் வரவேற்று உறையாற்றினார்;. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த சகோதரர் அல் அமான் அவர்கள் இந்தியன் சோசியல் ஃபோரத்தின் பணிகள் மற்றும் செயல்;பாடுகள் குறித்து தலைமை உரையாற்றினார்.
இஷா தொழுகையை தொடர்ந்து நிகழ்ச்சியின் இரண்டாம் அமர்வு 8:30 மணிக்கு ஆரம்பமானது. இந்நிகழ்ச்சியில் இந்தியா பிரடெர்னிட்டி ஃபோரத்தின் ஜித்தா மாகாண தமிழ்பிரவு தலைவர் சகோதரர் அமீர் சுல்தான் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து ஜித்தா தமிழ் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள்; ஜெய்சங்கர், அப்துல் அஜீஸ், செந்தமிழ் மன்ற நிறுவனர் பாண்டியன், மெப்கோ துணைத்தலைவர் இஜாஸ் அஹமது, தப்ரஜ் தலைவர் சீனி அலி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இம்மாபெரும் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தாயகத்தில் இருந்து வருகைப் புரிந்துள்ள எஸ்.டி.பி.ஐ கட்சியின் தமிழ் மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது அவர்கள் தேசத்தின் வளர்ச்சியில் நமது பங்களிப்பு என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். வேற்றுமையில் ஒற்றுமை கண்ட இந்தியா தற்போது பாசிசத்தின் கோரப் பிடியில் சிக்கி சின்னாபின்னாமாகி தேசத்தின் பன்முகத்தன்மை மற்றும் சகிப்புதன்மையை இழந்து கொண்டிருப்பதை தனது உரையில் விவரித்தார். தற்போதைய தமிழக அரசியல் நிலையையும் இந்திய அரசியல் சூழலையும் தனக்கே உரித்தான பாணியில் நகைச்சுவையாகவும் உணர்ச்சி பூர்வமாகவும் எடுத்துக் கூறினார். வாடிவாசலில் ஆரம்பித்த தமிழ தன்னெழுச்சிப் போராட்டம் தற்போது நெடுவாசல் வரை நீண்டுள்ளதையும் மக்கள் நலனில் அக்கறை கொண்ட எஸ்.டி.பி.ஐ கட்சி அணைத்து போராட்டங்களிலும் முன்னிற்பதை எடுத்துக்கூறினார்.
அயல்நாடுகளில் பொருள் ஈட்ட வந்தும் தன்னலம் பாராமல் பிறர் நலம் நாடி, சிறந்த முறையில் செயல்பட்டு வரும் சமூக சேவையாளர்களை இந்தியன் சோசியல் போரம் ஒவ்வொரு வருடமும் “”சிறந்த சமூக சேவகர்”; விருது வழங்கி கௌரவித்து வருகின்றது. அது போன்று இவ்வருடம் ஜித்தா தமிழ் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள்; ஜெய்சங்கர், அப்துல் அஜீஸ், செந்தமிழ் மன்ற நிறுவனர் பாண்டியன், மெப்கோ துணைத்தலைவர் இஜாஸ் அஹமது, தப்ரஜ் தலைவர் சீனி அலி ஆகியோருக்கு சிறந்த சமூக சேவகர் கேடயத்தினை; எஸ்.டி.பி.ஐ கட்சியின் தமிழ் மாநில பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது அவர்கள அவர்கள் வழங்கினார்கள். இவர்களின் சேவை வரும் தலைமுறையினருக்கு முன்னுதாரமாய் திகழ வேண்டும் என்பதே இந்நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களின் நோக்கம் என்பது நிறைவாய் தெரிந்தது.
நிகழ்ச்சியின் இறுதியாக சோசியல் ஃபோரத்தின் துணைத்தலைவர் சகோதரர் முஹம்மது ராஃபி அவர்கள் இம்மாபெரும் அரசியல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நன்றியினை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியினை சமூக சேவகர் பத்திரிகையாளர் ஜாபர் அவர்கள் தொகுத்து வழங்கினார்.
கலந்து கொண்ட அனைவர்களுக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என 400க்கும் மேற்ப்பட்டோர் பங்கெடுத்து பயன்பெற்றனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.