.

Pages

Monday, March 13, 2017

அதிரையில் ரேஷன் கடைகள் முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டம் ( படங்கள் )

அதிராம்பட்டினம், மார்ச்-13
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் ரேஷன் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய அதிரை பேரூர் திமுகவினர் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

ரேஷன் பொருட்கள் முறையாக வழங்கப்படுவதில்லை என்று கூறி இன்று (திங்கட்கிழமை) தமிழகம் முழுவதிலும் உள்ள ரேஷன் கடைகள் முன்னர் திமுகவினர் முற்றுகை இட்டு போராட்டம் நடத்திவருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, திமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ ஏனாதி பாலு தலைமையில், செயலாளர் இராம.குணசேகரன் முன்னிலையில் அதிராம்பட்டினம் கடைத்தெரு, வெற்றிலைக்காரத் தெரு, கடற்கரைத்தெரு, உள்ளிட்ட 7 ரேஷன் கடைகள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது ரேஷன் கடையில் பொருட்களை வழங்காமல் பொதுமக்களை அலைக்கழிக்கும் தமிழக அரசையும், மத்திய அரசையும் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட அதிரை பேரூர்
செயலர் இராம.குணசேகரன், அவைத்தலைவர் ஜே. சாகுல் ஹமீது, பொருளாளர் கோடி முதலி, துணைச் செயலாளர் ஏ.எம்.ஒய் அன்சர்கான்,
மாவட்ட பிரதிநிதி இன்பநாதன், ஒன்றிய பிரதிநிதி முல்லை மதி,என்.கே.எஸ் சபீர் அகமது, முத்துராமன்,முன்னாள் கவுன்சிலர்கள் முஹம்மது இப்ராஹீம், நூர்லாட்ஜ் செய்யது முகமது, என்.கே.எஸ் முஹம்மது சரீப், பகுருதீன் உள்ளிட்ட அனைவரும் போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைக்கபட்டனர்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.