.

Pages

Tuesday, March 14, 2017

துபாயில் மே மாதம் முதல் ரோபோ போலீஸ் அறிமுகம் !

அதிரை நியூஸ்: மார்ச்-14
எதிர்வரும் 2030 ஆண்டிற்குள் துபையின் 25 சதவிகித போலீஸ் சேவைகள் ரோபோ மயப்படுத்தப்பட வேண்டும் என்றும், நமது நாட்டில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையம் போல் அனைத்து ரோபோ காவல் நிலையம் ஒன்றும் திறக்கப்பட வேண்டும் என்ற நீண்டகால திட்டங்களுடனும் செயல்படும் துபை போலீஸ் துறையில் முதன்முதலாக எதிர்வரும் 2017 மே மாதம் முதலாவது ரோபோ போலீஸ் ஒன்று சேவையில் ஈடுபடுத்தப்படும் என துபையில் நடைபெற்ற போலீஸ் துறை சம்பந்தப்பட்ட கருத்தரங்கு ஒன்றில் பிரிகேடியர் அப்துல்லாஹ் பின் சுல்தான் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், எதிர்வரும் 2025 ஆம் ஆண்டிற்குள் உலகின் பாதுகாப்பு நிறைந்த முதல் 5 சிறந்த நகரங்களில் ஒன்றாக துபை திகழும் என்றும், 50 சதவிகித காவல் நிலையங்கள் தனக்குத் தேவையான மின்சக்தியை தானே தயாரித்துக் கொள்ளும் வலிமையை பெறும் என்றும், 2030 ஆண்டிற்குள் துபையில் அனைவரின் உடல் மூலக்கூறுகளின் தகவல்களும் (DNA Data Bank) சேமிக்கப்பட்ட உலகின் முதல் நகராக துபை விளங்கும் என்றும் இதன்வழி இனி மர்மமான குற்றங்கள், குற்றவாளிகள் என்ற நிலை தவிர்க்கப்படும் எனவும் தெரிவித்தார்.

ஸ்மார்ட் போலீஸ் சேவைகளுக்கான பிரிகேடியர் காலித் நாஸர் அல் ரசூக்கி அவர்கள் கூறியதாவது, மே மாதம் ரோபோ போலீஸ் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதை தொடர்ந்து படிப்படியாக ரோபோக்களின் சேவைகள் போக்குவரத்துத் துறை, தீவிரவாத தடுப்பு, செயற்கை புலனாய்வு என அனைத்திலும் ஈடுபடுத்தப்பட்டு ஒரு கட்டத்தில் மனித உதவிகள் இன்றியே தானியங்கும் போலீஸ் நிலையமும் அமைக்கப்படும் என தெரிவித்தார்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.