.

Pages

Tuesday, March 14, 2017

அமீரகத்தில் அடுத்து 2 நாட்களுக்கு ஆங்காங்கே மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு !

அதிரை நியூஸ்: மார்ச்-14
அமீரகத்தில் மழை பொழிவதே அதிசயம் என்ற நிலைமாறி மழைக்காலம் எப்போது முடியும் என எதிர்பார்க்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது என்றால் மிகையல்ல. உலகமே வியந்தும் பயந்தும் சொல்லும் அந்த 'பருவநிலை' மாற்றத்தால் அமீரகத்தில் எதிர்வரும் வியாழன் வரை மழை ஆங்காங்கே ஓரளவு பெய்யக்கூடும் என அமீரக தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அமீரகத்தின் பல பகுதிகளும் மேகமூட்டமாகவும், மிதமான காற்றுடனும் காணப்படும். கடற்கரை பிரதேசங்களில் ஈரப்பதம் 80 சதவிகிதம் அதிகரித்தும், மிகக்குறைந்த அளவாக 25 சதவிகிதமாகவும் இருக்கும்.

வானிலை மையத்தின் அறிக்கையின்படி, ஏற்கனவே நேற்று (திங்கள்) முதல் ஷார்ஜா, உம்மல் குவைன் ஆகிய பகுதிகளில் மிதமான மழை விட்டுவிட்டு பெய்து வரும் நிலையில் அடுத்து வரும் 2 நாட்களுக்கு இது சற்று அதிகரித்து இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மழை பெய்யக்கூடும்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.