தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெரு புதுப்பள்ளிவாசல் நிர்வாகப் பராமரிப்பில் இருந்து வருகிறது பள்ளிவாசல் பின்புறம் அமைந்துள்ள புதுப்பள்ளி குளம். சுமார் 1 ஏக்கர் பரப்பளவை கொண்டது. இக்குளத்திற்கு நீர் ஆதாரமாக, சி.எம்.பி வாய்க்கால் மூலம் தவழ்ந்து வரும் ஆற்று நீர், அருகில் உள்ள செட்டியா குளத்தில் நீர் நிரம்பியவுடன், வழிந்தோடி, அதன் இணைப்பில் உள்ள புதுப்பள்ளி குளத்திற்கு வந்தடையும்.
ஒரு காலத்தில் பொதுமக்கள் ஆர்வமாக குளித்து மகிழ்ந்த இக்குளத்தில், தற்போது மழை நீரோடு, கழிவு நீர் நிரம்பி, பச்சை பாசிகள் படர்ந்து துர்நாற்றம் வீசிவருகிறது. இப்பகுதி வழியே செல்லும் ஆடு, மாடுகள் குளத்தில் தவறி விழுவதும், குளத்தில் குப்பைகள் கொட்டுவதும், குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் குளத்தில் கலப்பதும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்துவருகிறது.
குளத்தில் சூழ்ந்துள்ள சேறு, சகதிகளை அகற்றி, குளத்தை சுற்றி பாதுகாப்பு தடுப்பு அமைத்து, மரங்கள், செடிகள் நட்டு, மின் விளக்குகள், குடிநீர் வசதி, நடைமேடை, படித்துறை ஆகியவற்றை அமைத்து புதுமை பெறுமா? புதுப்பள்ளிவாசல் குளம்... இதற்கான முயற்சியை முன்னெடுத்துச் செல்வார்களா? இப்பகுதி தன்னார்வலர்கள், கொடையாளர்கள், மக்கள் பிரதிநிதிகள்.
இன்று (அக்.14) சனிக்கிழமை காலை எடுக்கப்பட்ட புதுப்பள்ளி குளத்தின் படங்கள்...














Very good decision to come forward this message and for the development of the best
ReplyDeleteஊரும் உலகமும் மறந்துவிட்ட நிலையில் நினைத்துபார்த்த அதிரை நியூசுக்கு நன்றி.
ReplyDelete