.

Pages

Monday, July 1, 2019

அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு பாராட்டு (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூலை 01
இன்று (ஜூலை 1) தேசிய மருத்துவர் தினத்தை முன்னிட்டு, மருத்துவர்களின் சேவையை பாராட்டும் வகையில், அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பில், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் டாக்டர் ஏ.அன்பழகன், டாக்டர் கெளசல்யா, டாக்டர் கார்த்திகேயன், டாக்டர் கலைவாணி, டாக்டர் சர்மிளா ஆகியோருக்கு சால்வை அணிவித்து, மகாத்மா காந்தியின் 'சுயசரிதை நூல்' அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத் தலைவர் எம்.அப்துல் ஜலீல், செயலாளர் எம்.நிஜாமுதீன், பொருளாளர் எஸ்.எம் முகமது முகைதீன், லயன்ஸ் சங்க இயக்குநர்கள் பேராசிரியர் கே.செய்யது அகமது கபீர், என்.ஆறுமுகச்சாமி, எம்.அப்துல் ரஹ்மான், உறுப்பினர்கள் குப்பாஷா அகமது கபீர், ஏ.கண்ணன், அகமது ஜுபைர், வரிசை முகமது, அஹ்லன் கலீபா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.