.

Pages

Thursday, September 4, 2014

முன்னாள் தலைமை ஆசிரியர் SKM ஹாஜா முகைதீன் அவர்களின் ஆசிரியர் தின வாழ்த்து செய்தி !

இன்று செப்டம்பர் 5 ம் நாள். நமது நாட்டின் இரண்டாம் குடியரசு தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்த தினமாகிய இந்நாளில் கொண்டாடப்படும் ஆசிரியர் தினத்தன்று அனைத்து வகை ஆசிரியர் ஆசிரியை பெருமக்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளும் அதே வேளையில் ஆசிரியர் தின செய்திகளாக என் எண்ணம் சார்ந்த சில கருத்துகளையும் பதிவு செய்திட விரும்புகிறேன்.

மாறிவரும் காலச்சூழ் நிலையில் கல்விச் சூழ்நிலையும் பெரிதும் மாறி வருகிறது. 'அகல உழுவதைக்காட்டிலும் ஆழ உழுவதே மேல்' என்ற போக்கு மாறி 'அகல உழுவதே மேல்' என்ற போக்கு கல்வித்துறையில் உருவாகியுள்ளது. தேர்வுகளில் குறிப்பாக 10 ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வுகளில் நூற்றுக்கு நூறு தேர்ச்சி பெற்றுப் பெருமை தேடிக்கொள்ள விரும்பும் பள்ளிகள் பரவலாகக் காணப்படுகின்றன. பெற்றோர்களும் அத்தகைய பள்ளிகளை நாடியே ஓடுகிறார்கள். கட்டணத்தை பற்றிக்கூட கவலைபடாமல். அரசுக் கல்வித்துறையும் இத்தகைய பள்ளிகளையே போற்றி பாராட்டுகிறது. எனவேதான் இப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் தேர்வை மட்டுமே இலக்காகக் கொண்டு மாணவர்களை உருவாக்குகின்றனர். இத்தகைய மாணவர்கள் உயர்க் கல்வியிலும் ஆய்வுக் கல்வியிலும் சிறப்பிடம் பெறத் தவறி விடுவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.    

எனவே ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு கல்வியோடு தன்னம்பிக்கையை வளர்த்தல், சுயசிந்தனையை ஊக்குவித்தல், சூழ்நிலைக்கேற்ப முடிவெடுத்தல், பிரச்சனைகளை எதிர்கொள்ளுதல், தோல்வி கண்டுத் துவளாதிருத்தல், கூச்சமின்றிப் பேசுதல், நல்ல நண்பர்களைத் தேர்வு செய்தல், காலத்தின் அருமையைக் கருதுதல், மனிதம் சார்ந்த அறப்பண்புகளைப் பெற்றுத் திகழ்தல் போன்ற வாழ்வின் வெற்றிக்குத் தேவையான வழி காட்டல்களையும் கற்றுத்தர வேண்டும். அப்போதுதான் ஆசிரியப்பணி அறப்பணியாகப் போற்றுதற்குரிதாகும்.
   
S.K.M ஹாஜா முகைதீன் M.A., B.Sc., BT
தலைமை ஆசிரியர் ( ஓய்வு )

9 comments:

  1. ஆசிரிய பெருமக்களுக்கு எனது இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. உண்மையான சிந்தனை!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. உண்மையான சிந்தனை! ஆசிரிய பெருமக்களுக்கு எனது இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. ஏணியாக இருந்து ஏற்றிவிட்டவர்கள் - தோணியாக இருந்து கரை கடக்க உதவியவர்கள் ஆசிரியர்கள்.

    ஆசிரியர்களிடமிருந்து வாழ்த்துக்களைப் பெற்றவர்கள் நாம்.

    அவர்களை நாம் வாழ்த்த விரும்பவில்லை. நமது அன்பையும் மரியாதையையும் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்வோமாக!

    ReplyDelete
  5. கல்வி நிறுவனங்கள் வியாபாரமாக்க பட்ட இக்காலகட்டத்தில் அவர்கள் கேட்க்கும் தொகையை கொடுத்து படிக்கும் மாணாக்கள் ஆசியர்கள் இடையிலான உறவு மாணவர்களின் படிப்பு முடிந்துடனே அற்று போய்விடுகின்றன.

    காரணம் நான் பணம் செலுத்தினேன் நீ எனக்கு படித்துகொடுத்தாய் என்ற வியாபாரநோக்கு இருப்பினும் சமுதாய பற்று மிக்க ஆசிரியர்களும் இருக்கத்தான் செய்கின்றனர் என்பதில் மாற்று கருத்து இல்லை .

    ReplyDelete
  6. நமது அன்பையும் மரியாதையையும் அவர்களுக்கு கண்டிப்பாக தெரிவித்துக் கொள்வோமாக!

    ReplyDelete
  7. ஆசிரியப் பெருந்தகை அவர்கள் தியாகிகள். மாணவன் வளர்ச்சிக்காகத் தன்னைத் தியாகள் செய்பவர்கள். இவர்கள் போன்றோர் பெயர்கள் கேட்டாலே மனம் இனிக்கும்.

    ReplyDelete
  8. தன்னம்பிக்கையை வளர்த்தல், சுயசிந்தனையை ஊக்குவித்தல், சூழ்நிலைக்கேற்ப முடிவெடுத்தல், பிரச்சனைகளை எதிர்கொள்ளுதல், தோல்வி கண்டுத் துவளாதிருத்தல், கூச்சமின்றிப் பேசுதல், நல்ல நண்பர்களைத் தேர்வு செய்தல், காலத்தின் அருமையைக் கருதுதல், மனிதம் சார்ந்த அறப்பண்புகளைப் பெற்றுத் திகழ்தல் போன்ற வாழ்வின் வெற்றிக்குத் தேவையான வழி காட்டல்களையும் கற்றுத்தர வேண்டும்...வரவேற்க தக்க சிந்தனை

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.