அதிரை நியூஸ்: ஆக. 25
அமீரகத்தில் எதிர்வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் உடலிற்கு தீங்குவிளைவிக்கக் கூடிய புகையிலை பொருட்கள் (Tobacco products), சக்தி பானங்கள் (Energy Drinks) மற்றும் கேஸ் அடைக்கப்பட்ட மென்பானங்கள் (Carbonated Drinks) மீது 50% முதல் 100% வரை கலால் வரி (Excise Tax) உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த அதிரடி வரி உயர்வின் மூலம் அரசின் வருமானம் அதிகரிப்பதுடன் சுற்றுச்சூழலுக்கும், மனிதர்களுக்கும் கேடு தரும் இப்பொருட்களின் பயன்பாடு குறையுமென்றும், அரசிற்கு ஆண்டுக்கு சுமார் 7 பில்லியன் திர்ஹம் கூடுதல் வருவாய் கிடைக்குமென்றும், இந்த வரி வருவாயை கொண்டு மக்களுக்கான பல நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் அமீரக பெடரல் அரசு அறிவித்துள்ளது.
இந்த வரி உயர்வு அனைத்து ப்ரீ ஸோன்கள் (Free Zone Ports)(வரியற்ற மண்டலங்கள்) உட்பட நாடு முழுமைக்கும் பொருந்தும். அமீரகத்திற்குள் கொண்டு வரப்படும், மற்றும்அமீரகத்திற்குள் உபயோகப்படுத்தப்படும் மேற்படி பொருட்களுக்கு இது பொருந்தும். அதேவேளை நாட்டிற்குள் கொண்டு வரப்படாமல் வெளியே எடுத்துச் செல்லப்படும் பொருட்களுக்கு பொருந்தாது. (உம். ஏர்போர்ட், துறைமுகம், ப்ரீ ஸோன் போன்றவை வழியாக)
இப்புதிய கலால் வரிகள் ஒரு பார்வை:
1.கேஸ் ஏற்றப்பட்ட பானங்கள்:
கேஸ் ஏற்றப்பட்ட சோடா மற்றும் மென்பானங்கள் மீது 50 கலால் உயர்த்தப்பட்டுள்ளதால் தற்போது 1.50 திர்ஹத்திற்கு விற்கப்படுபவை இனி 2.25 திர்ஹத்திற்கு விற்கப்படும்.
2. சக்தி தரும் பானங்கள்:
உடலிற்கு சக்தி தரும் பானங்கள்; என்ற பெயரில் விற்கப்படும் இப்பானங்கள் மீது 100 கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளதால் உதாரணத்திற்கு தற்போது 8 திர்ஹத்திற்கு கிடைக்கும் பானம் இனி 16 திர்ஹத்திற்கு விற்கப்படும்.
3. புகையிலை தயாரிப்புகள்:
சிகரெட் போன்ற புகையிலை தயாரிப்புகளின் கலால் வரியும் 100 உயர்த்தப்பட்டுள்ளதால் இனி விலைகளும் இருமடங்காகும். உதாரணத்திற்கு 12 திர்ஹத்திற்கு கிடைக்கும் சிகரெட் பாக்கெட் அக். 1 முதல் 24 திர்ஹமாக உயரும்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.