.

Pages

Monday, August 28, 2017

ஹஜ் செய்திகள்: பெர்மிட் இல்லாத உள்நாட்டு ஹஜ் பயணிகளை ஏற்றி வந்த 17 பேர் மீது கடும் நடவடிக்கை !

கோப்புப் படம்
அதிரை நியூஸ்: ஆக. 28
பெர்மிட் இல்லாத சட்டவிரோத ஹஜ் பயணிகளை ஏற்றி வந்து பிடிபட்ட சவுதி மற்றும் வெளிநாட்டு வாகன ஓட்டிகள் 17 பேர் மீது கடும் நடவடிக்கை அறிவித்துள்ளது சவுதி ஜவாஜத் (இமிக்கிரேசன்).

இவர்கள் மீது அறிவிக்கப்பட்டுள்ள தண்டனையின் விபரங்கள்:
1. அனைவருக்கும் 15 தினங்கள் சிறை தண்டனை
2. 20,000 முதல் 140,000 ரியால்கள் வரை அபராதம்
3. வாகனம் பறிமுதல் செய்யப்படும்
4. குற்றவாளிகளின் பெயர்கள் பத்திரிக்கைகளில் வெளியிடப்படும்
5. சிறை தண்டனை மற்றும் அபராதம் கட்டியபின் வெளிநாட்டினர் நாடு கடத்தப்படுவர்

என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பல்வேறு எல்லை நுழைவாயில்கள் வழியாக புனித மக்கா மற்றும் மதினா நகர்களுக்குள் ஊடுருவ முயன்ற சுமார் 472,000 சட்டவிரோத ஹஜ் பயணிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக ஜித்தா கவர்னரேட்டின் கார் சிண்டிகேட் அறிவித்துள்ளது.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.