.

Pages

Sunday, August 20, 2017

பட்டுக்கோட்டையில் மத்திய அரசைக் கண்டித்து எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம் !

பட்டுக்கோட்டை, ஆக. 20
மத்திய அரசைக் கண்டித்து பட்டுக்கோட்டை தலைமை அஞ்சல் நிலையம் முன் எஸ்டிபிஐ கட்சியினர் சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்டத் தலைவர் இசட். முகமது இலியாஸ்  தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் சாகுல் ஹமீது, பொருளார் அபுல் ஹசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை மாவட்ட பொதுச்செயலாளர் ஜே. ஹாஜி சேக்,
திருச்சி மாவட்டச் செயலாளர் அசன் ஆலிம் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகையில்; பசுப் பாதுகாவலர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்வோர் முஸ்லிம்கள், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர் என நூற்றுக்கணக்கான குடும்பங்களை பாஜக அரசுகளின் துணையோடு அழித்து விட்டனர். பல அப்பாவிகளை அடித்துக் கொல்வதின் மூலம் முஸ்லிம்கள் மற்றும் பிற சமூக மக்களின் மனதில் பீதியை ஏற்படுத்தும் சதித்திட்டத்தின் விளைவே இது எனவும், இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்துப் பேசினார்கள்.

முன்னதாக எஸ்டிடியூ மாவட்டத் தலைவர் ஏ. அமானுல்லா வரவேற்றார். ஆர்பாட்ட முடிவில், புதுப்பட்டினம் கிளைச் செயலர் சேட் என்கிற சேக்  நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.