.

Pages

Saturday, August 19, 2017

மஹாராஜா சமுத்திரம் அணையிலிருந்து வீணாக கடலில் கலக்கும் உபரி நீரை பம்பிங் மூலம் அதிராம்பட்டினம் நீர் நிலைகளை நிரப்பக் கோரிக்கை !

அதிராம்பட்டினம், ஆக.19
அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காலிக்காடு கிராமம், மஹாராஜா சமுத்திரம் அணைக்கட்டு நீரை பம்பிங் மூலம் இரைத்து அதிராம்பட்டினம் பகுதி நீர் நிலைகளை நிரப்புவதற்கு, அதிரை பேரூர் முன்னாள் சேர்மன் எஸ்.எச் அஸ்லம் உட்பட இப்பகுதி நீர்நிலை பாதுகாப்பு ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்துள்ள தொக்காலிக்காடு கிராமத்தில் கடந்த 1955 ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜ் அவர்களால் மஹாராஜா சமுத்திரம் அணைக்கட்டு திறந்து வைக்கப்பட்டது. இந்த அணைக்கட்டு நீர் இப்பகுதி விவசாயத்திற்கும், நீர் நிலைகளை நிரப்புவதற்கும் பயன்படுத்தப்பட்டன.

இப்பகுதியில், அதிகளவில் மழை பெய்யும் போதும், விவசாயத்திற்காக கல்லணை கால்வாயில் இருந்து தண்ணீர் திறந்து விட்டாலும், அணைக்கட்டின் நீர் வரத்து அதிகரிக்கும். இதனால் அணையிலிருந்து வெளியேறுகிற நீர் வீணாகக் கடலில் கலக்குகிறது. இந்த நீரை, வறட்சி காலங்களில் அதிராம்பட்டினம், தொக்காலிக்காடு, மகிழங்கோட்டை, நடுவிக்காடு, மிலாரிக்காடு ஆகிய கிராமங்களின் விவசாயத்திற்கும், நீர் நிலைகளை நிரப்புவதற்கும் பயன்படுத்தும் வகையில், தொக்காலிக்காடு மஹாராஜா சமுத்திரம் அணையிலிருந்து சுமார் 1000 மீட்டர் நீளம் வரை அமைந்துள்ள சிஎம்பி வாய்க்கால் வரை குழாய்கள் அமைத்து, 100 குதிரை திறன் கொண்ட (100 HP) மோட்டார் பம்பிங் மூலம், சிஎம்பி வாய்க்கால் வழியாக நீர் இறைத்து கொண்டு வரும் திட்டத்தை செயல்படுத்த அதிரை பேரூர் முன்னாள் சேர்மன் எஸ்.எச் அஸ்லம் உட்பட இப்பகுதி நீர்நிலை பாதுகாப்பு ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து, அதிராம்பட்டினம் முன்னாள் சேர்மன் எஸ்.எச் அஸ்லம் கூறுகையில்;
அதிராம்பட்டினம் பகுதியில் ஏற்படும் வறட்சியை போக்கும் விதத்தில் கடந்த ஆண்டு அதிரை நசுவினி ஆறு ஓடையிலிருந்து சுமார் 1800 மீட்டர் நீளத்திற்கு குழாய் அமைத்து நீர் நிரப்பும் பொருட்டு, அதிராம்பட்டினம் பேரூராட்சி பொதுநிதி ரூ. 43.50 லட்சம் மதிப்பீட்டில், 20 எச்.பி. மோட்டார் அமைத்து நீர் இறைக்கும் திட்டப்பணி நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம், அதிராம்பட்டினம் கரிசல் மணி குளம், ஆலடிக் குளம், மன்னப்பங்குளம், செக்கடி குளம் உள்ளிட்டவை பயன்பெற்று வருகின்றன.

இத்திட்டம்போல், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காலிக்காடு கிராமம் மஹாராஜா சமுத்திரம் அணைக்கட்டுலிருந்து வீணாக கடலில் கலக்கும் உபரி நீரை பம்பிங் மூலம் அதிராம்பட்டினம், தொக்காலிக்காடு, மகிழங்கோட்டை, நடுவிக்காடு, மிலாரிக்காடு ஆகிய கிராமங்களின் விவசாயத்திற்கும், நீர் நிலைகளை நிரப்புவதற்கும் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக அதிராம்பட்டினத்தில் உள்ள காட்டுக்குளம், மரைக்கா குளம், செடியன் குளம் உள்ளிட்ட சிஎம்பி வாய்க்கால் இணைப்பில் உள்ள அனைத்து குளங்கள் மற்றும் இதர குளங்களுக்கு பம்பிங் நீரை கொண்டு வரமுடியும். மேலும் தொக்காலிக்காடு, மகிழங்கோட்டை, நடுவிக்காடு, மிலாரிக்காடு ஆகிய கிராமங்களின் விவசாயிகள் பாசன வசதி பெற முடியும்.

இதுதொடர்பாக, இப்பகுதி விவசாயிகள், பஞ்சாயத்தார்கள், சமூக ஆர்வலர்கள் அடங்கிய குழுவினர்களின் ஆலோசனைகளைப் பெற்று ஒரு திட்டம் வரையறுக்க முடிவு செய்துள்ளோம். இத்திட்டத்தை செயல்படுத்தும் விதமாக, மாவட்ட ஆட்சியர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம். விரைவில் சம்பந்தப்பட்டோரை சந்தித்து கோரிக்கை மனுக்கள் அளிக்க உள்ளோம்.

இப்பகுதி விவசாயிகள், நீர் நிலை பாதுகாப்பு ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், கிராம பஞ்சாயத்தார்கள், ஜமாத்தார்கள் ஆகியோர் அடங்கிய குழுவினரின் கருத்துக் கேட்புக் கூட்டம் விரைவில் நடத்த முடிவு செய்துள்ளோம்' என்றார்.
 

1 comment:

  1. அதிரை பேரூர் முன்னாள் சேர்மன் எஸ்.எச் அஸ்லம் அவர்கள் 5 வருடங்கள் சேர்மனாக இருந்தாரே அப்பொழுது இந்தயோசனை இல்லையோ

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.