அதிரை நியூஸ்: ஆக. 27
தொடர்ந்து புனிதப் பள்ளிகள் மற்றும் புனித ஸ்தலங்களில் நடைபெற்று வரும் விரிவாக்கப் பணிகளும், மேம்படுத்தப்பட்ட சேவை கட்டமைப்புகளுமே இந்த வருட ஹாஜிகள் அதிகரிப்பின் காரணம் என்றும் எதிர்வரும் காலங்களில் சுமார் 4 மில்லியன் ஹாஜிகளை கையாள முடியும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக புனிதமிகு மக்கா மற்றும் புனிதமிகு மதினாவில் நடைபெற்று பிரமாண்ட விரிவாக்கப் பணிகள் மூலம் அதிகமான யாத்ரீகர்களின் கொள்ளளவு அதிகரிக்கும். ஜமாரத் பாலங்கள், மினா, முஜ்தலீஃபாவில் செய்யப்பட்டுள்ள வசதிகள், மெட்ரோ ரயில் போக்குவரத்துக்கள், நிழல் கூறையுடன் கூடிய பாலங்கள், காற்றோட்டம் உள்ள சுரங்க வழிப்பாதைகள், வான்வழி குட்டி விமான கண்காணிப்புக்கள் ஆகியவை ஹாஜிகளின் பாதுகாப்பையும், நடமாட்டத்தையும் உறுதி செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜித்தா சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கும் ஹாஜிகளை பரிவுடன் வரவேற்று உதவுவதற்காக சுமார் 7,000 தன்னார்வத் தொண்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வயதான பெரியவர்களின் வசதிக்காக கோல்ப் கார்கள் (Golf Cars) எனப்படும் வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காகவும், தவறும் குழந்தைகளை மீண்டும் பெற்றோர்களிடம் சேர்க்கும் வரை அன்பு செலுத்தி பராமரிப்பதற்காகவும் பெண்கள் மற்றும் மாணவிகள் அடங்கிய சிறப்பு குழுவினரும் கடந்த 8 ஆண்டுகளாக ஹஜ் களத்தில் சேவையாற்றி வருகின்றனர்.
Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.