.

Pages

Tuesday, August 22, 2017

புனிதமிகு மக்காவில், ஆக. 24 ந்தேதி முதல் 3 நாட்களுக்கு மழை பெய்யும் வாய்ப்பு !

அதிரை நியூஸ்: ஆக. 22
புனிதமிகு மக்காவில் தற்போது உலகெங்கிருந்தும் ஹஜ் யாத்ரீகர்கள் தங்களின் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக குழுமி வருகின்றனர். ஹஜ் கிரிகைகள் இன்னும் சில தினங்களில் துவங்கவுள்ள நிலையில் அங்கு 3 தினங்களுக்கு மழை பெய்யலாம் என்ற வானிலை முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது.

துல்ஹஜ் பிறை 2 முதல் 4 வரை (ஆகஸ்ட் 24 முதல் 26) வரையான நாட்களுக்குள் அதாவது ஹாஜிகள் மினா கூடாரங்கள் மற்றும் அரஃபா மைதானத்திற்கு செல்வதற்கு முன் இம்மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

துல்ஹஜ் பிறை 7 வரை புனித பூமிகளான மக்கா மற்றும் மதினா நகரங்கள் மழை மேகங்கள் சூழ்ந்தும், புழுதிக் காற்றுடனும், மின்னல் மற்றும் மங்கலான சூழலும் நிலவும் என்றும் சவுதி அரேபியாவின் வானிலை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான ஆணையம் தெரிவித்துள்ளது.

துல்ஹஜ் பிறை 8 முதல் பிறை 13 வரை மீண்டும் உயர் வெப்பத்திற்கு செல்லும் சீதோஷ்ண நிலையால் குறைந்தபட்சம் 30 முதல் 33 டிகிரி செல்சியஸ் வரையும் அதிகபட்சம் 42 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நிலவும். மேலும் அதே காலகட்டத்தில் இறுக்கம் (Humidity) 45 முதல் 85 சதவிகிதம் வரை நிலவும்.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.