அதிரை நியூஸ்: ஆக. 25
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் துவங்கப்பட்ட சவுதி அரேபியாவின் புதிய குறைந்த கட்டண பட்ஜெட் (Low Budget) விமான நிறுவனம் 'ஃபிளையடீல்' (Flyadeal) தனது சேவையை மிக விரைவில் துவங்கவுள்ளது. இந்த சேவை உள்நாடு மற்றும் வெளிநாட்டு வான்வெளித் தடங்களில் (Domestic & International Routes) நடத்தப்பெறும்.
இந்த விமான நிறுவனத்திற்காக புத்தம்புதிய 8 ஏர்பஸ் A320 மாடல் விமானங்களை குத்தகைக்கு தர துபையை சேர்ந்த விமான குத்தகை நிறுவனமாக DAE எனப்படும் துபை ஏரோஃபேஸ் என்டர்பிரைஸஸ் (Dubai Aerospace Enterprises) நிறுவனம் ஒப்பந்தம் செய்திருந்தது. ஒப்பந்தப்படி தனது முதலாவது விமானத்தை ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் உள்ள ஏர்பஸ் விமான கட்டுமான வளாகத்தில் வைத்து முறைப்படி 'ஃபிளையடீல்' நிறுவனத்திடம் ஒப்படைத்தது.
துபை ஏரோஃபேஸ் என்டர்பிரைஸஸ் என்ற நிறுவனம் ஏற்கனவே துபையின் எமிரேட்ஸ், பிளைதுபை உட்பட பல நிறுவனங்களுக்கு பயணியர் மற்றும் சரக்கு விமானங்களையும் உலக நாடுகள் பலவற்றிற்கும் குத்தகை அடிப்படையில் வழங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.
Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.