இரசாயனப் பொருட்கள் சேர்க்காத விநாயகர் சிலைகளைக் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே கரைக்க மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை வேண்டுகோள்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
தமிழகத்தில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவின்போது களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை, பூஜித்த பிறகு நீர் நிலைகளில் கரைக்கப்படும் வழக்கம் உள்ளது. ஆனால் அண்மைக்காலமாக இராசாயன வர்ணம் பூச்சுகளுடன் கூடிய விநாயகர் சிலைகளை வழிபட்ட பின்னர் அவற்றை நீர் நிலைகளில் கரைப்பதால் நீர் நிலைகள் மாசுபடுகின்றன மற்றும் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது.
மத்திய அரசால் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பது தொடர்பாக
கீழ்க்காணும் வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. சிலைகள் இயற்கைப் பொருட்களை கொண்டே செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகின்றது. எனவே, மக்கள் களிமண்ணால் செய்யப்பட்டவை, சுடப்படாதவை மற்றும் எவ்வித இரசாயனக் கலவையற்றதுமான விநாயகர் சிலைகளை மட்டுமே வழிபாட்டுக்கு பயன்படுத்த வேண்டும்.
2. சிலைகளுக்கு இரசாயன வர்ணம் பூசுவதை அடியோடு தவிர்க்க வேண்டும். அப்படி சிலைகளுக்கு வர்ணம் பூசினால் தண்ணீரில் கரையும் தன்மையுடைய மற்றும் எவ்வித தீங்கும் விளைவிக்காத வண்ணக்கலவைகளையே பயன்படுத்த வேண்டும். தீங்கு விளைவிக்கும் மற்றும் தண்ணீரில் கரையாத வண்ணங்களை அடியோடு தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.
3. இறைவனை வழிபடும் பொருட்களான மலர்கள், வஸ்திரங்கள் மற்றும் சிலைகளை அழகு செய்யப் பயன்படுத்தப்படும் ஏனைய பொருட்களையும் சிலைகளை கரைப்பதற்கு முன்பே சிலைகளிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் அவைகளிலிருந்து மக்கிப்போகும் தன்மையுடைய பொருட்களை தனியே பிரித்து மறு சுழற்சிக்கோ/உரம் தயாரிக்கவோ பயன்படுத்தவும், மக்காத பொருட்களை பிரித்தெடுத்து சுகாதாரமான முறையில் தாழ்வான பகுதியில் நிலத்தை சமப்படுத்த உபயோகப்படுத்துமாறும், துணிப்பொருட்களை அனாதை இல்லங்களுக்கு வழங்கமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
4. சிலைகள் கரைக்கும் இடங்களில் வெளியாகும் திடக்கழிவுகளை மலர்கள், துணிகள் அழகுபடுத்தப் பயன்பட்ட மற்ற பொருட்களையும் எரிப்பது அறவே தவிர்க்கப்படவேண்டும்.
5. விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடும் இடங்களில் ஒவ்வொரு குழுவினரும் இரசாயன கலவை, பிளாஸ்டர் ஆப் பேரிஸில் செய்யப்படும் சிலைகளால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமகக்ளிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் விளம்பர கையேடு தயாரித்து வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
6. இரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பது தவிர்க்கப்படவேண்டும். கடலோரத்தில், ஏரிகளில் விநாயகர் சிலைகளை கரைக்காமல் தவிர்க்கப்பட வேண்டும்.. கடலில் குறைந்தது 0.5 கி.மீ. தூரம் எடுத்துச் சென்று கரைக்கப்பட வேண்டும்.
மேலும் தஞ்சாவூர் மாவட்டத்தில் கீழ்க்கண்ட இடங்களில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன. சிலைகள் கரைக்க வேண்டிய இடங்கள் - கரைக்க வேண்டிய நீர் நிலைகள்
1 தஞ்சாவூர் வடவாறு, கல்லணைக் கால்வாய்
2 திருவையாறு காவேரி ஆறு
3 பாபநாசம் காவேரி ஆறு
4 சுவாமிமலை காவேரி ஆறு
5 கும்பகோணம் காவேரி ஆறு
6 திருபுவனம் வீரசோழன் ஆறு
7 திருவிடைமருதூர் வீரசோழன் ஆறு
8 ஆடுதுறை வீரசோழன் ஆறு
9 பட்டுக்கோட்டை (ம) வட்டாரம் கடல்
10 பேராவூரணி கடல்
11 கடரேலாரப் பகுதிகள் கடல்
மேலே குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் காவல்துறையின் முன் அனுமதி பெற்று விநாயகர் சிலைகளை கரைக்குமாறு அதுவும் இரசாயன வர்ணம் பூசப்படாத விநாயகர் சிலைகளை மட்டுமே கரைக்குமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.